Sri AthiGuru Trust


PARAMAGURU

Original idea was to publish a book by nellivanam on SRI PARAMAGURU.we gathered experiences from various people of all walks of life.they expressed their assocition with swamiji in their own words.we are trying to bring in original state without any addition /deletion.original manuscripts available for reference.we put our sincere effort to bring the voices of the hearts together.an effort by a last grade student of "THE HOLY PARAMAGURU".Ella pugazhum ejamanin thiruvadigaluke!

                                                                                                  

                                                                                                   ---



திரு.சந்தானகிருஷ்ணன்(சின்ன நைனா)
சேலையூர்,சென்னை.

"கடல் ஆழத்தை காண சென்ற உப்பு பொம்மை"

மண்ணில் மனிதனாக பிறந்து,தெய்வமாகி வாழும் புதூர் அண்னன் ஸ்வாமிகளை ஒரு நாள் பார்த்துவர புதூர் சென்றிருந்தேன்.மாலை நேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நான் அண்ணனை சந்தித்துவிட்டுதான் ஊர் திரும்பும் முடிவுடன் இருப்பதை அறிந்து ரைஸ் மில் அலுவலகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தனர்.

அண்னன் ஸ்வாமிகள் மதியத்திலிருந்து தனது அறைக்கதவை திறக்கவில்லை என்று அறிந்தேன்.எனது விருப்பப்படி அண்ணனை சந்தித்துவிட்டு ஊர் திரும்பும் முடிவில் இருந்தேன்.ஆனால் இரவு முழுவதும் அறைக்கதவு திறக்கப்படவில்லை.மணி பனிரெண்டு,எனது நம்பிக்கை குறைய, அத்திமரத்து ஆச்சியை வணங்கிவிட்டு மீண்டும் ரைஸ் மில் அலுவலகத்தில் வந்து தங்கி இருந்தேன்.

அன்று பெரிய ஸ்வாமி (பரமகுரு) பக்கத்திலுள்ள குடிலில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.விடியற்காலை நான்கு மணி இருக்கும்,யாரோ ஒரு அன்பர் வந்து அண்னன் கதவை திறந்து என்னை வரச்சொன்னதாக தெரிவித்தார்கள்.உடனே சென்று அண்ணனை வணங்கினேன்.

அண்னன்," என்னுடைய குருமார்களில் ஒருவர் பெரிய ஸ்வாமி வந்து இருக்காங்க ,அவங்களை போய் பாருங்க" என்றார்கள்.நான், உங்களைத்தான் முதலில் தெரியும், ஆகவே உங்களை பாரத்துவிட்டுத்தான் அவர்களை பார்க்கவேண்டும் என்றேன்.அண்னன்" இல்லை, நீங்க அவரைப்போய் பார்த்துவிட்டு வாங்க" என்றார் .ஒருவாறு மனதிருப்தியுடன் பக்கத்திலுள்ள ஓலைக்குடிசைக்குள் நுழைந்து வணங்கி நின்றேன்

பெரிய ஸ்வாமி" அருணாச்சலம் சொன்னானா?"என்றார்கள்.உட்கார சொன்னார்கள்.பிறகு ...என்னை பார்த்து" ஒ...டாக்டர் நந்தகுமாரின் சித்தப்பாவா?" என்றார்கள்.அமாம் என்று சொல்லிவிட்டு மௌனமாக ஸ்வாமியை பார்த்தேன்.அவர்களோ கதைப்பேச்சில் பல விஷயங்களை வைத்து தெரிய வேண்டியவைகளை எல்லாம் தெரியவைத்தார்கள்.

சித்தரின் நிலையை அறிவதும் ,ஞானிகளின் மனநிலையை உணர்வதும் ..பக்தனின் மன உணர்வை உணர்வதற்கும் பக்குவம் வேண்டும்.

எளிமையான தோற்றம்
வார்த்தைகளில் ஆழமான கருத்துக்கள்
அரவாரமில்லாத ஆன்மிக
உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்த பக்தி
தன்னிலை அறிந்தவர்களை அன்பால் ஏற்றுக்கொண்ட குரு.

இவரை தெரிந்துகொள்ள சென்ற நான் ,ஆழங்காணமுடியாத அவரின் நிலையை புரிந்துகொள்வதில்....கடல் ஆழங்காணச்சென்ற உப்பு பொம்மை போல நானும் கரைந்து விட்டேன்.

யார்தான் முழுமையான மனித தெய்வத்தை பூரணமாக அறியமுடியும்? .

-------o ------

 

இரா.குணசேகரன்
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)
திருவாரூர்

யாதினுக்கும் ஆட்சி உனது அருளே,அன்றோ? பராபரமே!

ஸ்ரீ ஆண்டாள்புரம் ஸ்வாமிகள் துணை

மாஸ்டர் ,எம்பரர் அண்ட் பெக்கர் (master , emperor and begger ) என்பது ஆண்டாள்புரம் ஸ்வாமிகள் தன்னைப்பற்றி வெளிப்படுத்திய வார்த்தைகள்.ஸ்வாமிகள் ஆன்மிக தொண்டில் ஆசார்யன் (master )ஆகவும்,நீதிபரிபாலனத்தில் சக்ரவர்த்தி (emperor ) ஆகவும்,எளிய வாழ்வில் துறவி (beggar) ஆகவும் வாழ்ந்து காட்டினார்கள்.

 

தலைஞாயிறு பக்கம் மணக்குடி எனும் ஊரில் பிறந்து இலங்கையில் ஜூனியர் கேம்பிரிட்ஜ் கல்வி கூடத்தில் படிக்கும் போது குருவின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்று வெள்ளாடை உடுத்திய சந்நியாச வாழ்வை மேற்கொண்டார்கள்."ராமா ராமா" என்று ஜெபிப்பதும் ,தன்னை வணங்குபவர்களை "நமஸ்காரம் நாராயணனுக்கு"என்று ஆசிர்வதிப்பதும்,காரபிடாகை அருகில் ஆண்டாள்புரம் என்னுமிடத்தில் குடில் அமைத்து தங்கியும்,கால்நடையாகவே நாகபட்டினத்திலிருந்து மன்னார்குடி வரை சென்றுவந்தும்,பக்தர்கள் வீட்டு திண்ணைகளில் தங்கியும்,தன்னை தேடி வருபவர்களை ஆசிர்வதித்தும்,மக்களை ராமராஜ்யத்தின் குடிப்படைகளாக பாவித்தும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தும், மக்களை உய்வித்தும், ஒரு மாமுனிவராக தவவாழ்க்கை வாழ்ந்தார்கள்.

 

ஸ்வாமிகள்  குடிலில் இருக்கும்போது வெள்ளைவேட்டி பறக்கும்,இது ஸ்வாமிகளின் இருப்பை, அவர்களை காணவருபவர்களுக்கு தெரிவிக்கும்."திடல்"என்று சொல்லக்கூடிய குடிலில் ஸ்வாமிகள் மட்டும்தான் சென்று தங்க முடியும் ,மற்ற யாருக்கும் அதில் நுழைய அனுமதி கிடையாது. எக்ஸிமோக்கள் வாழ்வது போல ஒரு கூடாரம்.அதில் தவழ்ந்து தான் உட்செல்ல முடியும். ஒருவருக்குமேல் அதில் தங்கமுடியாது.சாக்கு பையை விரித்து, அதன்மேல் வாசம்.அது ஸ்வாமிகளின் தூங்காமல் தூங்கும் தவவாழ்க்கை. 

பத்து கட்டளைகள் ( ten  commandments ) என்று ஒரு ஆங்கிலப்படம், அதில் செயின்ட் மோசஸ் நடந்து வருவார்,அப்போது கடல் இரண்டாக பிரிந்து அவர் நடக்க வழி கொடுக்கும்.இது திரைப்படம்.அதே போன்று,திருவாரூர் கமலாலய குளத்தில் ஸ்வாமிகளின் கட்டளைக்கு இணங்கி அன்பர் ஒருவர்,ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு,தண்ணீரில் இறங்கி எவ்வித ப்ரயத்தனமும் இன்றி நடக்கும்போது அலைகளால் ஒதுக்கி கரையேற்றப்பட்ட அனுபவம் நிகழ்ந்துள்ளது.அந்த அனுபவத்திற்குரிய பெரியவர் இன்றும் நம்மிடம் வாழக்கரை என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.   
 
 ஸ்வாமியை திடலுக்கு சென்று தரிசித்துவிட்டு திரும்பும்போது இருட்டாகிவிட்டதே என்று மனம்கலங்கிய பக்தருக்கு வைக்கோலை கொளுத்தி நீ போய்வா என்று அனுப்பிவைத்தபோது,வைக்கோல் வெளிச்சம் சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு வரப்புகளில் நடந்து சென்றவருக்கு துணையாக வந்ததை இன்றும் பரவசத்துடன் நம்மிடம் சொல்லும் ஆன்மிக பெரியார் திருமலைராயன்பட்டினத்தில் பக்தி நெறி பரப்பி வருகிறார்.

நீதி மன்றங்கள் ,காவல் நிலையங்கள்,அரசு அலுவலகங்கள் மற்றும் புகைவண்டிகளைக்கூட ஸ்வாமிகள் தெய்வீக அம்சங்களாக கருதி ஊதுபத்தி கொளுத்தி சூடம் ஏற்றிய சம்பவங்கள் நமக்கு தெய்வீக உணர்வை ஊட்டி மெய்சிலிர்க்க வைப்பவைகள். யாதுமாய் நின்றாய் காளி என்ற மஹாகவிஞன் பாரதியின் கவிதை இங்கு நினைவுக்கு வரும்.கோவில்கள்,சர்ச்சுகள்,மசூதிகள் எவையானாலும் தான் காண்பவற்றை வழிபடுவது ஸ்வாமிகளுக்கு வழக்கம்.சாதி,மத வேற்றுமையில்லா சமரசம் அவர்கள் கண்ட வாழ்வு. 

 

தனக்கென ஒரு மடமோ,கோவிலோ எந்தவொரு அடையாளமோ அவர்கள் அமைத்துக்கொள்ளவில்லை.தன்னிடம் வருபவர்களிடம் அவர்களுக்கு உரிய கடமையை செய்யுங்கள் என்று உபதேசித்தார்கள்.தன்னிடம் வந்தவர்கள் அதர்மத்திலிருந்து தர்மத்தை பின்பற்ற வழிசெய்தார்கள்.

 

கையில் தண்டம் ,இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி,அதில் ஒரு குவளை,பத்தி,சூடம்,மற்றும் மெழுகுவர்த்தி இவைகள்தான் அவர்களது உடமைகள்.ஸ்வாமிகள் நடந்துசெல்லும்போது உடன் ஒருவரை அழைத்துபோவது உண்டு.உடன் அழைத்துப்போவதில் வாய்ப்பு கிடைப்பவர்களுக்கோ ஆனந்தம்.செல்லும் ஊர்களில் கோவில்களில் மட்டுமே ஸ்வாமிகள் தங்குவது வழக்கம்.அப்போது அன்பர்களின் இல்லங்களில் இருந்தோ அல்லது கடைகளில் இருந்து வரும் உணவை அங்குள்ள கோவிலில் கால சாந்தி முடிந்துவிட்டதா என்று கேட்டறிந்து சோறு,குழம்பு,காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றாக பிசைந்து படைத்துவிட்டு ருசி பார்க்காமல் ஓர்,இரு உணவு கவலங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றவற்றை அருகிலுள்ளவர்களுக்கு ப்ரசாதமாக கொடுத்து விடுவார்கள்.அவ்வாறு விபூதி பிரசாதம் கேட்ப்பவர்களுக்கும் திடலில் இருந்து சிறிது மண்ணை எடுத்து பொட்டலமாக தருவது ஸ்வாமிகள் வழக்கம். 

 

ஆச்சார்யன்,சக்ரவர்த்தி,துறவி ஆகிய தன்மைகளின் ஒட்டுமொத்த உருவமாக தூய தவ வாழ்க்கை வாழ்ந்த ஸ்வாமிகள் ராமரின் தர்மநெறியில் மக்களை உய்விக்க வந்தவர்கள்.ஒருசமயம் அவர்கள் நடந்துவரும் போது தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை ஒன்று எழுந்து நின்று வணங்கிவிட்டு மீண்டும் தவழ தொடங்கியதாக ஸ்வாமிகள் வழிவந்த சீடர் நமக்கு தெரிவிக்கும்போது மனம் நெகிழ்ச்சி அடைகிறது.

"அண்னன் தம்பிகளாக இருங்கள்,ஒற்றுமையாக வாழுங்கள்"என்று ஸ்வாமிகள் நமக்கு அறிவுறித்தியதை நெஞ்சில் நிறுத்தி ஸ்வாமிகள் கட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

ஸ்வாமிகளின் அன்பில் நெகிழ்ந்து நிற்கும்
இரா.குணசேகரன். 

 

 

------- 0 --------

 

 

ச.இராஜேந்திரன்

"புணர்ந்த பாவம் எலாம் பரிபூரணம்
உணர்ந்த ஞானி விழி பட ஓடுமே "

மனிதன் நிலைதடுமாறி நிம்மதி இழந்து குழப்பமும் ,கொந்தளிப்பும் ,சோதனைகளும் ,மற்றும் வேதனைகளும் சேர்ந்து தாக்க,காப்பாரும்,மீப்பாரும் இன்றி கடும் தீய சூறாவளியில் தத்தளிக்கும் போது மனிதன் தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளது என்பதை அக்கனம்தான் உணரத்தலைப்படுகிறான்.பிறகு அச்சக்தியின் பாதங்களில் சரண் அடைகின்றான்அதுவும் கொஞ்சம் நேரம் மட்டும்தான்,துன்பம் வரும்போது இறைவனைத்தேடி பயனில்லை.பிறவி எடுத்த பொழுதிலிருந்து இறைவனை அடையும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்,ஈடுபட்டால்தான் இப்பிறவியின் அந்தியகாலத்திலாவது இறையுணர்வு அடையமுடியும்.அவ்வாறு தீவிர வைராக்கியத்துடன் இறைவனை நோக்கி பயணம் செய்து வெற்றி அடைந்தவர்கள் எத்தனையோ ஆத்ம ஞானிகள் உண்டு.

 

நம் நாகப்பட்டினம் திருப்பூண்டியில் நம்மோடு நடமாடி,நம்மோடு பேசி,நம்மோடுவாழ்ந்து, தலைவனோடு கலந்தவர் ஓம் ஸ்ரீ ஆண்டாள்புரம் ஸ்வாமிகள் என்கிற ராஜகோபாலஸ்வாமிகள்.அருந்தவ ஆத்மஞானி.ஆத்ம ஞானியின் நெஞ்சில் இடம்பிடிப்பது என்றால் மனோ நிலையில் வாழ்க்கை நடத்துகின்ற எந்த மனிதனாலும நிச்சயம்முடியாது.பொன்னையும்,பொருளையும்,மண்ணையும்விரும்பும் மனிதனின் வார்த்தைகளால் அவர்தம் மனதைக்கவரும் முயற்சிகள் யாவும் பயனளிக்கா.ஆகவே அவர் அளவிலே நின்று,அவர்நெஞ்சில் இடம்பிடித்து,அவர் கருணைக்கு பாத்திரம் ஆககூடியவனாக இன்றும் நான் கையேந்தி மனநிலையில் வாழ்ந்து வருகிறேன்.ஆகவே அவர்தம் ஆத்மசாதனைப்படிகள்,ஆத்மஞான அனுபவங்கள்,அடைந்த ஆத்ம ஞானத்தின் வழிவகைகள்யாவும்பரம்பொருளுக்கே வெளிச்சம்.   

 

 சுவாசுவாமிகளுக்கு உள்ள சிறப்பு குணம் தன்னை அண்டினவனுக்கு மோட்ச்சத்தை தந்தருளும் ஆற்றல் பெற்றவர்.ஒருசமயம் சுவாமிகள் பௌர்ணமி அன்று சாயங்காலம் நிலவுஒளியில், பூஜை செய்யும் சுவாமியின் மிக அருகாமையில் அமர்ந்து இருந்தேன்.அப்பொழுது என் இதயத்தில் சுவாமிகள் கண்ணனாக காட்சியளித்தது என்னுடைய வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக நினைத்து இன்றுவரை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன்.

சுவாமிகள் எங்கு சென்றாலும் நடந்தே செல்வது வழக்கம்,இரவுநேரங்களில் சுவாமிகள் அருகில் உறங்குவதும் உண்டு,அப்படி உறங்கும்போது அன்று நடந்தது,இன்று உணர்ந்து பார்க்கும்போது "ஒவையார் அருளிய குறளமுதம்" என் நினைவுக்கு வருகிறது."பிண்டத்தினுள்ளே பேராதிறைவனை அண்டம் கண்டு தாணர்ச்சிக்குமாறு".இதில் என்னென்ன உளவோ அவையனைத்தும் பிண்டத்திலும் உள்ளது.பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது.அண்டத்தில் உள்ளதை தன பிண்டத்தில் கண்டார் ஐயா ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள்.வெளிப்புற அண்டத்தின் ஆசைகள் அனைத்தும் அழிந்தன.தம்முள்ளே தம்மை கண்டார்.அண்டமும்,பிண்டமும் வேறல்ல என்பதை கண்டார். 

 

ஓம் ஸ்ரீ சுவாமிகளின் அருட்சக்தியை கண்டவர்கள் பலர்,சுவாமி நம் வீட்டிற்கு வரமாட்டாரா ஏங்கியோர்கள் பலருண்டு. ஆனால் சுவாமிகள் யார்வீட்டு உள்ளேயும் சென்றது கிடையாது,வெளியில்தான் அமர்ந்து இருப்பார்கள்.என் குடும்பத்துடன் சென்று சுவாமிகளிடம் பலமுறை ஆசிர்வாதம் பெற்று இருக்கிறேன்.சுவாமிகள் ஒரு கலியுக கண்ணனாக,நடமாடும் தெய்வமாக உணர்ந்துள்ளேன்.இன்றும் சுவாமிகளின் அனுகிரஹத்தாலும் ஆசிர்வாதத்தாலும் பல சித்தர்களையும்,ஞானிகளையும் தரிசித்து எல்லோரும் வளமுடனும் நலமுடனும் வாழ்வோமாக.எல்லாம் வல்ல ஆண்டாள்புரம் சுவாமிகளின் ஆசி பரிபூரணமாக எல்லோருக்கும் கிடைக்கவும் ஐயாவை மனதில் நினைத்து வாழ்வோமாக.
இப்படிக்கு
ச.இராஜேந்திரன். 

 

-------- 0 ---------

 

ம்.சித்திக் முஹம்மது
திருப்பூண்டி
நாகப்பட்டினம்

திருப்பூண்டி மேலபிடாஹையில் எங்களுக்கு கடை உண்டு.எனது தகப்பனார் முஹம்மது இப்ராஹிம் ஐம்பது வருஷம் முன்னர் ராஜகோபாலசுவாமியும் எனது தகப்பனாரும் நண்பர்கள்.ஐம்பது வருடங்களுக்கு பிறகு சுவாமி எனது குடும்ப நிலையை தெரியப்படுத்தினார்கள்,அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ராஜகோபாலசுவாமி சித்தர்,மஹான்,நமக்கு தெரியாத விஷயங்களை அவர்கள் தெரியப்படுத்துவார்கள்.சிந்தாமணி ஆண்டாள்புரம் திடல் தனி இடத்தில வாழ்ந்தார்கள்.

ம்.சித்திக் முகம்மது

 

---------- 0 -----------

 

 

 டாக்டர் தி ஜெயராமன்
கொளப்பாடு
9003839266

ஆண்டாள்புரம் சுவாமிகளே சரணம்

எனது இல்லத்தில் உள்ளே இருக்கும் போது என் வீடு வாசலில் ராமா என்று ஒரு குரல் வந்தது.அப்போதுவெளியில் வந்து பார்த்தேன்,தூரமாக சுவாமிகள் சென்றுவிட்டார்கள் ,சிறிது நேரம் சுவாமிகளையே பார்த்து கொண்டு நின்று இருந்தேன்,கொஞ்சதூரம் சென்று ஓர் இடத்தில உட்க்கார்ந்தார்கள் ,உடனே சுவாமியை நோக்கி ,இருக்கும் இடத்திற்கு சென்றேன்.சுவாமிக்கு சரணம் செய்துகொண்டபோது ,நீ நல்லாயிருப்ப போடா என்று சொன்னார்கள்.அதுமுதல் நானும் என் குடும்பமும் நல்ல விதமாக இருந்துவருகிறோம்.சுவாமிகளின் பெருமையை சொல்லிமாளாது.

சுவாமிகளின் பிரியன்
தி.ஜெயராமன்
   
  ------------ 0 ------------ 

ம.பஞ்சாபகேசன்
காருகுடி

சிவமயம்
ஆண்டாள்புரம் சாமி, திருப்பூண்டி அருகில்
நாள் தெரியவில்லை,நான் ஒரு சாதாரண மனிதன்,ஒருநாள் என்னைவந்து பார்த்து ஆண்டாள்புரத்தில் எனக்குஒருகொட்டகை உள்ளது,அந்த கொட்டகையில் இந்த திருநீறை போட்டுவிடு என்றார்.அந்த திருநீறை கொட்டகையில் போட்டவுடன் அதிலுள்ள பாம்புகள்,பூரான்,தேள் எல்லாம் ஓடிவிட்டது.அதில் தங்கிக்கொண்டு என்னிடம் வந்து சாப்பாடு கேட்டார்.நான் சாதம் வடித்தவுடன் அந்த சாதத்தை நீர் விலாவி ஒரு முறத்தில் இலைபோட்டு சாதம் வைத்து கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.அவர் தேவையான அளவு சாப்பிட்டுவார்,பின்புஅப்படியேவிட்டுவிட்டுசென்றுவிடுவார்.நான்ஆறுபெண்கள்பெற்றவன்,என்னைஆறுபொண்ணுக்காரன்என்றுதான்அழைப்பார்.என்னைப்பார்த்து உனக்கு ஆறு பெண் உள்ளது,நீ ஜெயித்துவிடுவாய் என்று சொல்வார்,நான் எனது ஆறு பெண்களையும் எந்த பொருள் சேதாரம் எந்த சொத்து விரயம் இல்லாமல் ஜெயித்துவிட்டேன்(திருமணம் செய்து கொடுத்து விட்டேன்).

அதன்பிறகு நான் ஆலயப்பயணம் மேற்கொண்டேன்.ஒரு நாள் ஆண்டாவரம் சாமி இறந்துவிட்டார்.நான் அன்றுதான் ஊருக்கு வந்தேன்,அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது.தற்சமயம் அவர் கோமல் என்ற ஊரில் சமாதி அடைந்துள்ளார்.

இவன்
ம்.பஞ்சாபகேசன்   
 

---------- 0 -----------

 

 

சிவகுருநாதன்
புதூர்
திருநெல்லிக்காவல்

ஆண்டாள்புரம் சுவாமிகள் திருப்பூண்டிக்கு தெற்கே நான்கு    கிலோ மீட்டர் தொலைவில் அச்சகரை  என்ற இடத்தில் முதன் முதலில் தனியே தங்கி இருந்தார்கள்.ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வேப்பமரம்,ஒரு குளம், சிறிய இடம் ஆகியவை இருந்தன.தினமும் குளத்தில் குளித்துவிட்டு நாற்காலியில் உட்க்கார்ந்திருப்பார்கள்.மிகவும் வேண்டியவர்கள்,தொடர்புள்ளவர்கள் மட்டுமே சென்று சாமியை தரிசிப்பது வழக்கம்.மிக நீண்ட தாடி வளர்ந்து இருக்கும்.கையில் எப்போதும் ஒரு சிறிய கம்பு வைத்து இருப்பார்கள்.

அங்கிருந்து நாகூர் ஆண்டவர் கோயில்,வேளாங்கன்னியிலிருந்து குறுக்கு ரோட்டில் சென்று கோரக்கர் சமாதியில் தங்குவார்கள்.அங்கிருந்து நாகூர் நடந்துசெல்வது வழக்கம்.வழியில் நீலாட்சியம்மனை தரிசிப்பதும் வழக்கம்.அங்கிருந்து திருப்பூண்டி,கருங்கண்ணி வழியாக செல்வார்கள்,கருணாநிதி பிள்ளை (மளிகை கடை)வீட்டில் தங்குவார்கள்.  களத்திடல்கரை வழியாக வாழக்கரை வந்து நாயனா வீட்டில் தங்குவார்கள்.திருக்குவளை வழியாக கொளப்பாடு பக்கிரிசாமி பத்தர் வீட்டில் இரவு தங்குவார்கள்.சூரமங்கலம்,நால்ரோடு வழியாக புதூர் சனவெளியில் மயான கரையில் தியானம் செய்வார்கள்.மடியில் வைத்து இருக்கும் சிறு செப்பு குவளையில் தண்ணீர் வைத்து தியானிப்பார்கள்.அங்கிருந்து சிவகுருநாதன் வீட்டில் இரவு தங்குவார்கள்.சில நேரங்களில் திருவண்ணாமலை சுவாமி கோவிந்தானந்த சாமிகளும் ஒரே நேரத்தில் தங்குவார்கள்.இருவரும் பேசி பார்த்ததில்லை.காலையில் எழுந்ததும் புறப்பட்டு சின்னமில் ஸ்ரீ அருணாச்சல சுவாமிகள் இடத்தில் வந்து தங்குவார்கள்.திருநெல்லிக்காவல் கோவில் வழியாக திருத்தங்கூர் ,ஆண்டான்கரை கடந்து இருள்நீக்கி ஆலமரத்தடியில் அமர்வார்கள்.அங்கிருந்து புறப்பட்டு திருவண்டல்த்துறை கோயிலில் தங்குவார்கள்.மழவராயநல்லூர் வழியாக கீழப்பாலம்(மன்னார்குடி)வருவார்கள்.அங்கிருந்து ராஜகோபால சுவாமி கோயிலில் ஓரிரு நாட்கள் தங்குவார்கள்.திரும்பிவரும்போதும் அதே இடங்களில் தங்கி திருப்பூண்டி வந்து சேர்வார்கள்.மாதத்தில் இருமுறை இதேபோன்று நடந்தே செல்வது வழக்கம்.   
 

சாமிகளை யார் வாங்கினாலும் ஒரு புன்சிரிப்பு மட்டுமே பதிலாக வரும்.நிற்பதில்லை.யாரையும் தொடுவதில்லை.சாதாரணமாக பணம் போன்றவற்றை வாங்குவதில்லை.புகையிலை பொட்டலமும் சிறு கூரையில் செய்த கூடையும் இருக்கும்.சில நேரங்களில் தேநீர்,இட்லி போன்றவற்றை கடையிலிருந்து வாங்கிவரச்சொல்லி உண்பது வழக்கம்.

சிவகுருநாதன். 

 

----------- 0 ------------

 

 

த .முருகையன்
த/பெ தம்பியப்பன்
மேலவாழக்கரை
திருக்குவளை

எனக்கு சுமார் இருபது வயதிலிருந்து சாமிகளிடத்து அன்பு கொண்டவன்.சுவாமிகளின் இருப்பிடமான ஆண்டாள்புரத்தில்வருடத்திற்குஇரண்டுமுறைகொட்டகைபோட்டுகொடுப்பேன்.இந்தபணியைநானும்என்தம்பியும்செய்வதுண்டு.மன்னார்குடி,புதூர்,திருநெல்லிக்காவல் போன்ற இடங்களுக்கு சுவாமிகளுடன் பலமுறை சென்றுவந்திருக்கிறேன்.ஒரு முறை நான் சுவாமிகளுடன் மன்னார்குடி சென்டருந்தபோது சுவாமிகள் வணங்கிய சமாதியை வணங்க நினைத்தேன்.சுவாமிகளின் உத்தரவு கிடைத்ததும் வணங்கினேன்.எனக்கு காரபிடாகை என்ற ஊரில் திருமணம் நடந்தது,அதன்பின்னர் சித்திரைமாதம் வெள்ளிக்கிழமை அன்று எனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.வெள்ளிக்கிழமை ஆன் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று பலர் சொல்ல கேட்டு வருத்தப்பட்டு,குழப்பத்தில் இருந்தேன்.ஒருநாள் சுவாமிகள் என்னைப்பார்த்து வெள்ளிக்கிழமை பிள்ளை பிறந்தது பற்றி நீ எந்த கவலையும் பட தேவையில்லை,அவன் நன்றாக இருப்பான்,உன்னையும் நன்றாக கவனிப்பான்,என ஆசிர்வதித்தார்கள்.சுவாமிகளின் ஆசிர்வாதத்தால் என்னை இதுவரை கவனித்துக்கொள்கிறான்.நன்றாக இருக்கிறான்.ஒரு சமயம் நான் சுவாமிகளுடன் மன்னார்குடிக்கு  சென்றிருந்தேன்.சாமி அவர்கள் எனக்கு செலவுக்கு பணம் கொடுத்து வாழக்கரைக்கு போ,போனவுடன் குளித்துவிட்டு ஈரவேட்டியுடன் சொக்கநாதர் ஆலயத்திலுள்ள துர்கையம்மனுக்கு ஒரு ரூபாய்க்கு சூடம் வாங்கி ஏற்று என்றார்கள்.சுவாமிகள் சொல்லியவண்ணம் வாழக்கரை வந்து குளித்து ஈரவேட்டியுடன் சூடம் ஏற்றி வழிபட்டுவிட்டு வாசல் அருகே வந்தேன்,சுவாமிகள் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டேன்.சுவாமிகள் என்னைப்பார்த்து, வீட்டுக்கு சென்று வேட்டியை மாற்றிக்கொண்டு வா என்றார்கள்.பக்கத்துக்கு தெருவிலுருந்த என் வீட்டிற்கு சென்று என் வேட்டியை மாற்றிக்கொண்டு ,சுவாமிகளை வந்து பார்த்தபோது சாமிகள் அவ்விடத்தில் இல்லாததுகண்டு பல இடங்களிலும் தேடி பார்த்துவிட்டு வீட்டிற்குச்சென்றேன்.பதினைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் சுவாமிகளை காணும் பாக்கியம் எனக்கு கிட்டியது.ஐயா அவர்களின் அனுகிரஹத்தால் நல்லபடியாக இருக்கிறேன். 

 

த .தம்பியப்பன்

 

---------- 0 -----------

 

தங்கராசு
த/பெ வேணு கோனார்
வாழக்கரை
திருக்குவளை

நான் வாழக்கரை கிராமத்தில் வசித்து வருகிறேன்.சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு சுவாமிகள் வாழக்கரை வழியாகவிஜயம்செய்தபோதுநானும்என்நண்பர்ராமசந்திரன்என்பவரும்வயலில்எங்கள்வீட்டுஆடு,மாடுகளைமேய்த்துக்கொண்டிருந்தோம்.சாமிகள்எங்களைஆசிர்வதித்தார்கள்.சுவாமிகள் எங்கள் ஊர் சொக்கநாதர் ஆலயத்தில் வந்து தங்கியிருந்து செல்வார்கள்.  நான் சுவாமிகளை அடிக்கடி சந்திப்பேன்.எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது.அப்பொழுது எனக்கு வயிற்று உபத்திரம் வந்துவிட்டது.என்னால் முடிந்த அளவு வைத்தியம் செய்து பார்த்தேன்,நோயின் உபத்திரம் சற்றும் குறையவில்லை.ஒரு நாள் சுவாமிகளை சந்தித்து எனது கஷ்டத்தை கூறினேன்.சுவாமிகள் ஒரு தேங்காயை எடுத்து கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு வரச்சொன்னார்கள்.சுவாமிகள் சொல்லியவண்ணம் சென்றேன்.குளத்தில் குளித்துவிட்டு தேங்காயை உடைக்க சொன்னார்கள்.அன்றிலிருந்து என் நோயின் உபத்திரம் குறைந்தது.என்னை ஒருமுறை புதூர் காளியம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்று ஒரு இரவு அங்கு தங்கவைத்து எனக்கு செலவுக்கு பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பினார்கள்.நான் சாமிகளை எப்பொழுது சந்தித்தாலும் உன்னிடம் நல்ல மனசு இருப்பதால் உன்னை அணுகினேன் என்று சொல்வார்கள்.

ஒருமுறை நான் சாமிகளை சந்தித்து என்னுடைய கஷ்டங்களையெல்லாம் சொன்னேன்.சாமி என் உயிரை காப்பாற்றிதந்தீர்கள்,ஜீவனத்திற்கு என்ன செய்வேன் என்று கேட்டேன்.அதற்கு சுவாமிகள் உன் மரைக்கார் சோறுபோடுவான் என்றார்கள்.சுவாமிகள் சொல்லியபடி மரைக்கார் என்னை அழைத்து அவர் பண்ணையில் வேலைகொடுத்தார்.சுவாமிகள் சொன்னபடி நேர்மையாக பணியாற்றி வருகிறேன்.சுவாமிகள் அனுக்கிரஹம் எனக்கு கிடைத்தபிறகு எனக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை,இரண்டு ஆன் குழந்தைகள் பிறந்தது.சுவாமிகளின் அருள்வாக்கின்படி நல்ல சுகமாக இருக்கிறோம்.என் மூத்த மகள் திருமணம் தடைபட்டு இருந்தது,சுவாமிகளை வேண்டிக்கொண்டேன்.  என் கனவில் சுவாமிகள் தோன்றி மாப்பிள்ளை இருக்கும் திசையை கையால் காட்டி,அந்த திசையில் பார்க்கச்சொன்னார்கள்.சுவாமிகள் சொன்னபடி அதே திசையில் நல்ல இடத்தில மாப்பிள்ளை கிடைத்தது,திருமணமும் இனிதே நடந்து நன்றாக இருக்கிறார்கள்.இரண்டாவது மகள்,மகன் திருமணமும் சுவாமிகளின் ஆசிர்வாதத்தால் நல்ல இடத்தில் நடந்தது.சுவாமிகளின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கவில்லையென்றால் என் வழக்கை எப்போவோ போயிருக்கும்.எங்கள் ஊர் சொக்கநாதர் கோவிலில் சுவாமிகளின் திருவுருவத்தை வரைந்திருக்கிறோம்.நான் அங்கு சென்று வழிபடுவேன்.சாமிகளை நான் வணங்கும்போது ,சுவாமி நான் உங்களுக்கு தொண்டுசெய்யவேண்டும் என்று ப்ரார்த்திப்பேன்.ஒருநாள் சுவாமிகள் என் கனவில் தோன்றி நீ எனக்கு தொண்டு செய்ய இன்னும் பலஆண்டுகள் இருக்கு என சொன்னார்கள்.சுவாமிகளை நான் சந்திப்பதற்கு முன்பு அரை ஏக்கர் நிலம் இருந்தது,சுவாமிகளின் அருளால் தற்பொழுது போதுமான அளவு வசதி வாய்ப்புள்ளது.சுகமாக
இருக்கிறேன்.சுவாமிகள் கோமல் என்ற ஊரில் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.இப்பொழுதும் என் கனவில் சுவாமிகள் தோன்றி மறைகிறார்கள்.இது நான் செய்த பாக்கியம் என கருதுகிறேன்.நான் வேலைபார்க்கும் முதலாளி ஒரு முஸ்லீம்,நல்ல மனிதர்,இந்து கோவில்களுக்கெல்லாம் நிதி உதவி செய்வார்.சுவாமிகளின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோமலில் வெகுவிமரிசையாக நடந்துவருகிறது.ஒருமுறை அந்த குருபூஜை விழாவிற்கு முதலாளியைக்கேட்டு ஒரு கலம் நெல் வாங்க நினைத்தேன்.சுவாமிகள் அன்று இரவு என் கனவில் தோன்றி ஒரு கலம் நெல் எனக்கு தருவதற்கு உன்னிடம் வசதி இல்லையா ,இதற்கு  மரைக்காரை  கேட்கணுமா என்றார்கள் ,ஆகவே  மரைக்காரை  நான் கேட்காமல் அன்றுமுதல் என் வயல் நெல்லை அரைத்து சுவாமிகளின் குருபூஜைக்கு கொடுத்து வருகிறேன்.சுவாமிகள் எனக்கு பலவிதங்களில் நல்லபல சௌரியங்களை வழங்கியுள்ளார்கள்.சுவாமிகள் ஜீவசமாதி பீடம் உள்ள கோமலுக்கும்,வாழக்கரையில் உள்ள அவர்களது திருஉருவ படத்தையும் அடிக்கடி சென்று வழிபாட்டு வருகிறேன்.சுவாமிகளுக்கு தொண்டுசெய்யவேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேற எல்லாம்வல்ல ஆண்டாள்புரம் சுவாமிகளை பிரார்த்திக்கிறேன்.

வே.தங்கராசு  
   

---------- 0 -----------

 

ராமதாஸ்
த/பெ வெங்கடாஜல கோனார்
மேலவாழைக்கரை
திருக்குவளை
 
என் தந்தையார் வெங்கடாஜலக்கோனார் என்பவர்சுவாமிகளிடத்துஅன்புகொண்டவர்.சுவாமிகளுக்கு உணவு அளித்து உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்.என் அண்ணன் ராஜமாணிக்கம் என்பவருக்கு உடல்நலம்  சரியில்லாமல் இருந்துவந்தார்.அவருக்கு பலஇடங்களில் இருந்து திருமணவரம் வந்தது. பலவைத்தியம்  செய்தும் குணம் கிடைக்கவில்லை.ஆகவே அவருக்கு திருமணம் செய்துவைக்க எங்களுக்கு பயம் ஏற்பட்டது.குழப்பம் அடைந்து இருந்த அந்த சமயம் என் தகப்பனார் சுவாமிகளை சந்தித்து,,   சுவாமி என் மகன் இந்த நிலையில் இருக்கின்றானே,,அவனுக்கு திருமணம் செய்யலாமா, என்று கேட்டபோது சுவாமிகள், அவனுக்கு திருமணம் செய்துவை குழந்தை,குட்டிகளை பெற்று பேரன் பேத்திகளை அடுக்காகப்பெறுவான் என சொல்லியவண்ணம் திருமணம் செய்துவைத்தோம்.சாமிகள் அருள்வாக்கின்படி எந்தக்குறையும் இல்லாமல் நன்றாக உள்ளார்.நானும் சுவாமிகளின்மீது அளவற்ற அன்புகொண்டு வழிபட்டு வருகின்றேன்,நன்றாக . இருக்கின்றேன்.   

 

--------- o ---------

 

 

கலியபெருமாள்
திருவாரூர்

திருவாரூர் சோமுதேவர் வீட்டில் ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகள் தங்கி இருந்தபோது அடியார்க்கு நல்லான் என்று எங்களால் அன்பாக அழைக்கப்படுகின்ற திரு சுப்ரமணியன் என்பவர் மூலம்தான் நான் சுவாமிக்கு அறிமுகமானேன்.ஆனால் அதன்பின்னர் புதூர் ஸ்ரீ  அண்ணன்சுவாமிகளின்,சின்னமில்லுக்குஅடிக்கடிசென்றுவருவதாலும்,சுவாமிகள்அங்கும்அடிக்கடிவருவதாலும்,எனக்கும்,குறிப்பாக

,எனதுகுடும்பத்திற்கும்சுவாமிகளின்அன்பும்,ஆதரவும்,அதிகரித்தது.பல்வேறுவிதங்களிலும்,வகைகளிலும்,ஸ்ரீஆண்டாள்புரம்சுவாமிகள்இன்றளவும்,என்னையும்,எனது குடும்பத்தையும் காத்து காப்பாற்றி தருகிறார்கள் என்பதை மிக்க நன்றியுடனும்,பக்தியுடனும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் அடிக்கடி புதூர் ஸ்ரீ அண்ணன் சுவாமிகளை தரிசிக்க செல்வதுண்டு,அப்போது ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகள் தங்கி இருந்தால்,ஆண்டாள்புரம் சுவாமிகள்தான் வந்து இருக்கிறார்களே நீங்கள் உங்கள் குறைகளை அவர்களிடமே சொல்லுங்கள் என்று  
 என்னிடம் ஸ்ரீஅண்ணன் சுவாமிகள் சொல்லுவார்கள்.

நானும் அண்ணன் சுவாமிகளின் ரூமின் அருகிலுள்ள ஆண்டாள்புரம் சுவாமிகளின் சிறிய கீற்று கொட்டகைக்கு சென்று,சாமி எனது தந்தையருக்கு மிகவும் உடல்நலம் கெட்டுப்போய் இருக்கிறது.திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு டாக்டர் தவமணி அவர்களிடம் வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறேன்,தொண்ணூறு சதவிகிதம் இவரை காப்பாற்ற வாய்ப்புகள் குறைவுஎன்று மருத்துவர் சொல்கிறார்,என்ன செய்வது என்று தெரியவில்லை என்று முறையிட்டேன்.அப்போதுசாமி அவர்கள்,அவர்களிடமுள்ள விபூதியை மடித்து விட்டெறிந்து,இதை ஐந்து உருண்டைகளாக செய்து தினம் காலையில் வெறும் வயிற்றில் கொடு,எல்லாம் சரியாகும் என்றார்கள்.அதுபடியே நானும் கொடுத்தேன்.அடுத்த செக்கப்பிற்கு டாக்டரிடம் சென்றபோது நடக்கவே முடியாதநிலையில் இருந்த எனது தந்தையார் காரைவிட்டு தானாகவே இறங்கி நடந்து வந்ததை கண்ட டாக்டர் தவமணிமிகவும் ஆச்சரியம் அடைந்து என்ன பண்ணீங்க என்று என்னிடம் கேட்டார்.ஆனால் இதுபற்றி அதாவதுசுவாமியை பற்றியோ,அவர்கள்  விபூதியை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.  சுவாமி என்னிடமும்,என் குழந்தைகளிடமும் மிகவும் பிரியமாக இருந்தார்கள். அவர்களுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும்.ஒருமுறை சுவாமிக்கு வேஷ்டி/துண்டு மற்றும் நிறைய மாம்பழங்களுடனும் திருக்குவளை அங்காளபரமேஸ்வரி கோயிலில் தங்கி இருந்தபோது சென்று பார்த்தது ஒரு மறக்கவே முடியாத அனுபவம்.
 
மேலும் எனக்கு எனது தொழில் ரீதியாக ஏற்பட்ட பல்வேறு தொல்லைகளிலிருந்தும் இன்றுவரை என்னை காப்பாற்றிவருகிறார்கள்.இன்னும் என்னால் நிறைய சொல்ல முடியும்.எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியாது.சொல்லவே முடியாத எவ்வளோவோ ரகசியங்கள் இருக்கின்றன.கடைசியாக ஒன்றை சொல்லி முடித்து கொள்கிறேன்.ஒருமுறை புதூர் ஸ்ரீ அண்ணன்  சுவாமிகளுக்கு வலதுகால் முட்டியில் ஒரு சிறிய புண் வந்து விட்டது.நான் ஆண்டாள்புரம் சென்று சுவாமியை பார்த்துவரலாம் என்று சென்றேன்.அப்போது ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமி என்னிடம்,டேய் ....  ஒங்க அண்ணனுக்கு காலில் ஒரு சின்ன புண் இருக்கு,அதனால இந்த திருநீர் பொட்டலத்த கொண்டுபோய் கொடுத்து அதில தடவிக்க சொல்லு...என்று கொடுத்தார்கள்.நானும் உடன் புதூர் சென்று ஸ்ரீ அண்ணனிடம் கொடுத்து சாமி இதுபோல் சொன்னார்கள் என்று கொடுத்தேன்.அதற்குஸ்ரீ அண்ணன் சுவாமிகள்,ஏன் சார் எவ்வளவு பெரியவங்ககிட்ட இருந்து இத்திருநீர் வந்து இருக்கு?இதைப்போய் காலில தடவ சொல்றிங்களே? என்று அந்த சாமி கொடுத்த திருநீறை வாயில் போட்டு கொண்டார்கள்.

மேலும் என் மனைவிக்கு ஏற்பட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகளால்தான் சுகமானது.

நன்றி.

கலியபெருமாள்.
 

--------- o ----------

 

 

ஒய்.எஸ்.அருளாந்தசாமி நாடார்
திருநெல்லிக்காவல்

எனக்கும் சுவாமிக்கும், எனக்கு சுமார் பத்து வயதிலிருந்தே பழக்கம்,கிட்டத்தட்ட ஒரு நண்பனை போன்ற பழக்கம்.சுவாமி பணத்தை விரும்பாதவர்கள்.அவர்கள் தந்த விபூதியால் வியாதிகள் பலவும்குணமாயின.அதற்காக எவரிடமும் ஒரு பைசாகூட வாங்கியதில்லை.சுவாமியை சிலர் போட்டோ எடுக்க விரும்பி போட்டோ எடுத்தார்கள்.ஆனால் சுவாமியின் படம் எதிலும் விழவே இல்லை. செல்லும் இடமெல்லாம் நடை பயணமாகவே சென்றார்கள். மேலும் சுவாமி எனக்கு நிறைய பல நன்மைகள் செய்து இருக்கிறார்கள்.தயவுசெய்து அதையெல்லாம் கேட்காதீர்கள்.என்னால் சொல்ல இயலாது.

அருளாந்தசாமி 

 

--------- o ----------

 

 

திரு.மணிவண்ணன்
திருப்பூண்டி
 
ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகளை சின்ன வயதிலிருந்தே தெரியும்.அவர்களை எனது சிறிய வயதில் அதிசயமாய் பார்த்துக்கொண்டு இருப்பேன்.சுவாமிகள் யாரையுமே அருகில் அனுமதிக்க மாட்டார்கள்.ஆனால் எனது தந்தை திரு லெட்சுமணன் அவர்கள் சுவாமியை மூன்று முறை சுவாமிகளை தொட்டு மொட்டைபோட்டு சுவாமிகளின் ஆசியை பெற்று இருந்தார்கள்.1977  ஆம் ஆண்டு புயல் வந்தபோது சுவாமிகள் மயக்கநிலை அடைந்தபோது எனது தந்தை திரு.லெட்சுமணன் சுவாமிகளை தூக்கி கொண்டுவந்து சிருஷ்டை    செய்தார்கள்.மேலும் நான் மற்றும் எனது கூட்டாளிகளும் சுவாமியின் திடலுக்கு சென்று அந்த சின்ன வயதில் சினிமா பார்க்க 25 காசு வாங்கிக்கொண்டு வந்தது எல்லாம் மறக்கமுடியாத அனுபவங்களாக இன்னும் எனது நினைவில் உள்ளது.

மணிவண்ணன்.   
 

-------- o ---------

 

வாழைக்கரை முருகையன்
புலிவலம்
14 /07 /12

நான் முதன்முதலில் சாமியை புதூர் அண்ணன் வாழைக்கரையில் இருக்கும்போது சந்தித்தேன்.அதன் பிறகு வாழைக்கரை வரும்போது சாப்பாடு கொண்டுவரச்சொன்னார்கள்.நல்லா இருப்பேன்னு ஆசிர்வாதம் செய்தார்கள்.15 /20 தடவை ஆண்டாள்புரம் சென்று சாமியை தரிசித்திருக்கிறேன்.இரண்டு படி அரிசி,வெல்லம்,மிளகாய்த்தூள்ஆகியவை கொண்டுவா என்று சொல்வார்கள்.முதலியார் இனத்தின் பிரதிநிதியாக உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்கள்.1988 இல் கடைசியாக சுவாமியை புதூர் அண்ணன் இடத்தில் சந்தித்தேன்.

முருகையன். 

 

----------- o ------------

 

ராஜா
டீக்கடை
பெருமாள் கோவில்
நாகப்பட்டினம்


1982  இல் இருந்து எனக்கு நாகப்பட்டினம் வந்தபிறகு தெரியும் என்றாலும் முன்னமே எங்கள் பூர்விக வீடான மன்னார்குடி வீட்டில் பெரும்பாலும் வந்து தங்குவார்கள். அப்போது எனக்கு மிகவும் சின்ன வயது.அதாவது 10 /15 வயதிற்குள் இருக்கலாம்.திடீரென்று நள்ளிரவில் டேய் கெளம்புடா ,  புதூர் போகணும் என்பார்கள்.நானும் அந்த சிறிய வயதிலும் சுவாமியுடன் நடந்து புதூர் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் மில்வரைக்கும் சென்றுவிட்டுவிட்டு பின்னர் வீடு திரும்புவேன்.இப்படி பல்வேறு தடவை நடந்த அனுபவம் எனக்குள்ளது.இது தவிர சுவாமிகள் எங்களுக்கு உறவும் ஆகும்.எனது தந்தையாருக்குதாய்மாமன் உறவு முறை வேண்டும். . 

 

ராஜா

 

-------------- o--------------

 

 

சீதாராமன் (குருக்கள்)
உத்திரங்குடி

எனது பத்தாவது வயதில் 1948 இல் நான் ஐந்தாம் வகுப்பு புதூரில் படிக்கும்போது நால்ரோட்டிற்கும் புதூருக்கும் இடையில் கோண மதகடியில்சுவாமியை அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.என்னடா....! உங்க அப்பா எப்படி இருக்கிறார்,என்றுஎன்னிடம்கேட்பார்கள்.பின்னர் 1970 வாக்கில் புதூர் அண்ணன் சுவாமிகளிடம் அடைக்கலம் ஆனபிறகு சுவாமியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும்,நெருக்கமும் அதிகமானது.புதூர் சின்ன மில்லில் இருந்து மன்னார்குடிக்குநடந்துசென்றதுநடந்துசென்றது,குறைந்தபட்சம் ஐம்பது தடவையாவது இருக்கலாம்.புதூரில் புறப்பட்டு விக்கிரபாண்டியம் மாரியம்மன் கோவிலில் கொஞ்சம் ஓய்வு எடுத்து கொள்வார்கள்.அங்கு சுந்தர் டீ கடையில் வடை,காபி வாங்கிவரச் சொல்வார்கள்.வடை,காபி சாப்பிட்டபின்னர் அங்கிருந்து கிளம்பி தட்டாங்கோயில் பிள்ளையார்கோயில் வரை எங்கும் நிற்காமல் நடந்து சென்று அங்கு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்வார்கள்.பின்னர் அங்கிருந்து மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு அழைத்து செல்வார்கள்.இப்படி ஒருமுறை சென்றபோது டேய்...ஒரு ரூபாய்க்கு சூடம் வாங்கிட்டு வாடா என்றார்கள்.அதை என்னைவிட்டே கொளித்திட சொன்னார்கள்.டேய்...நான் சொல்லும்வரை கண்ணைதிறக்காதே...கண்ணை மூடிக்கடா என்றார்கள்.அப்போது எனது இதயத்தை யாரோ கைகளினால் பிசைவது போல் இருந்தது.  .மூக்கின் வழியே அதுவே வெளியே செல்வதுபோல் இருந்தது.சுவாமி சொல்லும்வரை கண்களை திறக்கவில்லை.பின்னர் எதுவோ மூக்கின் வழியே உள்ளே செல்வது போல இருந்தது.பின்னர் கண்களை திறக்கச்சொல்லி என்ன நடந்தது என்று கேட்டார்கள்.நடந்ததை சொன்னேன்.உனக்கு உடம்பில் சில வியாதியும்,கோளாறும் இருந்தது,அது இப்போது சரியாகிவிட்டது என்றார்கள்.அதிலிருந்து இன்று வரை நான் எந்த டாக்டரிடம் சென்றதில்லை.புதூர் அண்ணன் சுவாமிகளுடன் பலமுறை நள்ளிரவில் ஆண்டாள்புரம் சென்றிருக்கிறேன்.சுவாமி திடலில் எப்போதும் நிறைய பாம்புகள் இருக்கும்.ஆனால் அந்த பாம்புகளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது.அதுபோல பகல் வேளைகளில் சுவாமி எங்கு இருக்கிறார்களோ அப்போது அவர்களை நிறைய கருடன்கள்  வட்டமிடுவதையும் பார்த்து இருக்கிறேன்.எனக்கு தெரிந்தவரை சுவாமி மிகப்பெரியவர்கள்.

சீதாராமன்
 

---------- o -----------

 

அந்தோணி
இலுப்பூர்

1960 களில் புதூர் ஸ்ரீ அண்ணன் சுவாமிகளுடன் நான்கு ஆண்டுகள் மில்லிலேயே தங்கி இருந்தேன்.அப்போதுதான் சிந்தாமணி சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது.எப்படித்தான் தெரியுமோ சுவாமிகள் வருவதை தனது ஞானதிருஷ்டியால் அண்ணன் சுவாமிகள் தெரிந்துகொள்வார்கள்.சுவாமிகளுக்கு அப்படி இரண்டுதடவை இட்லி பார்சல் எடுத்து சென்று கொடுத்து இருக்கிறேன்,சுவாமி சாப்பிடுவதற்கு முன்னரே எனக்கு இரண்டு இட்லி கொடுத்துவிடுவார்கள்.சுவாமிகள் அருகில் யாரும் போகமுடியாது,கொஞ்சம் தூரத்தில்தான் நிற்கமுடியும்.எங்கு போனாலும் நடந்துதான் செல்வார்கள்.புதூர் அண்ணன்சுவாமிகள்,சிந்தாமணி சுவாமியை பற்றி நிறைய சொல்வார்கள்.அவர்கள் மிக மிக பெரியவர்கள்.அவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ அண்ணன் சொல்வார்கள்.எனவே நான் எனது வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை சிந்தாமணி சுவாமியை பார்த்து இருந்தாலும் அவர்கள் மிகப்பெரிய மகான் என்று என்னால் சொல்லமுடியும்.
 
அந்தோணி
 

--------- o -----------

 

 

வடுகையன்
சனவெளி

நாகை  மாவட்டம்,திருக்குவளை தாலுக்கா,பாங்கல்,சனவெளியில் நான் வசித்து வருகிறேன்.நான் சுமார் முப்பந்தைந்து ஆண்டுக்குமுன் சனவெளிக்கு குடிவந்தேன்.நான் தெய்வீகம் விரும்புபவன்.பெரியோரை மதிப்பவன்.அந்த வகையில் என் வீட்டு வாசலில் தென்னைமரவேர் ஓரமாக ஒரு கம்பு குச்சி வைத்துக்கொண்டு, ஒரு பெரியவர் உட்கருவார்.நான் கிட்டப்போய் எண்ணவேண்டும் என்று கேட்பேன்.கிட்டே வராதே என்பார்கள்.பிள்ளைகள் எல்லாம் கிட்டே போகும்போது குச்சை காண்பித்து எட்டி நில்லுங்கள் என்பார்கள்.அவர் நால்ரோடு தூங்குமூஞ்சி மரம் வேரில் உட்க்கார்ந்து இருப்பார்கள்.சனவெளி பிள்ளையார்கோவில்,புதூர் மினியன் கோவில்,புதூர் அண்ணன் இடத்திலும் அமர்வார்கள் என்று கேள்விப்பட்டபோது,வரும்போதெல்லாம் வணங்கிவருவேன்.கொஞ்சகாலம் கழித்து விசாரித்தபோது உச்சகட்ட அம்பாள் அவர் என்று பல ஆன்மிகவாதிகள் சொன்னபோது நாங்கள் வணங்கியது தெய்வத்தை என்று தெரிந்தபோது,மன மகிழ்ச்சியும் ஏற்பட்டது.அவர் வாசம்செய்த திருப்பூண்டி அருகே சிந்தாமணி என்ற இடத்துக்கு நானும் புதூர் நெல்லிவனமும் சென்று ஒருநாள் இரவு தங்கிவந்தோம்.இன்றுவரை புதூர் அய்யாவை வணங்கும்போது சிந்தாமணி சுவாமியையும் வணங்கிவருகிறேன்.

இப்படிக்கு
வடுகையன்
 
  --------- o -----------  

 

நாகபட்டினத்தார்
டீஸ்டால்
வாழக்கரை

மாதம் ஒரு முறை ஆண்டாள்புரம் சென்று புங்கமரத்தடியில் தங்குவேன்.குருவின் பாதங்களுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தல் வழக்கம். வாழக்கரையிலுருந்து புதூர் வரைக்கும் சுவாமியுடன் நடந்து சென்றது நினைவுக்கு வருகிறது.எனது கொல்லையில் உள்ளபிடாரிஅம்மன் கோவிலில் ஏழிலிருந்து எட்டு  மாதம் வரை சுவாமி தங்கியிருந்தார்கள். பலமுறை வாழக்கரையில் இருந்து சிந்தாமணி வரை நடந்து சென்று இருக்கிறேன்,சுவாமிகள் நள்ளிரவில் கூட வீட்டுக்கு வருவார்கள்.தண்ணீர் சாதமாயிருந்தாலும் சாப்பிடுவார்கள்.

கோமலில் சமாதி ஆவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சொன்னது,ஒருக்கால் நான் சமாதியானால் புதூரானுக்கு கலசம் வைக்க சொல் என்றார்கள்.

நாகபட்டினத்தார்

 

---------- o ----------

  .  .   
கணேசன்
புதூர்

எனக்கு பனிரெண்டு வயதில் இருந்து புதூர் சின்ன மில் அண்ணன் சுவாமிகளுக்கும் அன்பான தொடர்பு இருந்தது.அண்ணன் சுவாமிகள் மூலம்தான் சிந்தாமணி சுவாமிகளை எனக்கு தெரியும்.இருபது வயதிலிருந்து சிந்தாமணி சுவாமிகளை எனக்கு முப்பது ஆண்டுகள் மிக அன்பான பழக்கமுண்டு.எல்லோரையும் பெயரை சொல்லித்தான் அழைப்பார்கள்.ஆனால் என்னை டேய் சின்னப்பிள்ளை என்றுதான் அழைப்பார்கள்.எப்போது புதூர் வருவார்களோ அப்போது அவர்களது வேஷ்டியை என்னிடம் அவிழ்த்து தந்து,சின்னப்புள்ள,வாஷ் பண்ணி குடுடா,என்று சொல்வார்கள்.நானும் துவைத்து அயன் செய்து சுவாமிகள் அடுத்தமுறை எப்போது வருவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பேன்.எனக்கு தெரிந்து சிந்தாமணி சுவாமிகள் செய்த அற்புதம் என்ன என்றால்,கோட்டூர் அருகிலுள்ள திருப்பத்தூர் கிராமத்தில் எனது சித்தியின் மகனான என் தம்பியை பார்ப்பதற்காக திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திற்கு காலை எட்டேகால் மணிக்கு சென்றேன்.அப்போது ரயிலடி பிள்ளையார் கோயிலில் சுவாமி உட்கார்ந்து இருந்தார்கள்.டேய்...சின்ன புள்ள, சுப்பையாபிள்ளை கடையில் ரெங்கவிலாஸ் புகையிலையும்,கைலாசய்யர் ஹோட்டல்ல காபியும் வாங்கிட்டு வாடா என்றார்கள்.இரண்டையும் வாங்கிக்கொடுத்து விட்டு ரயிலில் திருட்டுறைப்பூண்டி சென்று பின்னர் அங்கிருந்து பேருந்து மார்க்கமாக திருப்பத்தூர் சென்று அங்கிருந்து உடனே புறப்பட்டு எனது தம்பியுடன் கோட்டூருக்கு சைக்கிளில் சென்றேன். ஓ..என்ன ஆச்சரியம் கோட்டூர் காந்தி சிலையருகில் சுவாமி உட்கார்ந்து இருந்தார்கள்.என்னடா தம்பியை பார்த்துட்டியா?என்றார்கள்.சுவாமி திருநெல்லிக்காவல் எட்டேகால் மணிக்கு உட்கார்ந்து இருந்தார்கள்.பத்தேகால் மணிக்கு எப்படி கோட்டூர் நடந்து வந்தார்கள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு அவர்களைப்பற்றி என்ன சொல்வது என்று ஒன்றும் தோன்றவில்லை.எனக்கு நிறைய மஹாபாரதம்,ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகள் சொல்வார்கள்.எனது வாழ்வில் எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த இரண்டு இதிகாசங்களில் இருந்துதான் அதற்கான தீர்வுகளை சொல்லி என்னை காப்பாற்றினார்கள்  .

அவர்கள் கோமல் கிராமத்தில் அடக்கம் ஆனபின்பும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் பெரும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது.

கணேசன்.   
 

------------ o -------------

 

வி.பாலசுப்ரமணியம்
டி.ஏ.ஈ
எக்ஸ் ஆர்மி

ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகளின் அருளாசியுடன்,என் சற்குரு அண்ணன் சுவாமிகளின் துணையுடன்...

ஸ்ரீஅண்ணன்அவர்கள்சுவாமிக்குஉணவுவாங்கிகொடுக்கபணம்,பொட்டலத்தில்மடித்துகொடுத்துகொடுக்கும்படிகூறினார்கள்.ஆண்டாள்புரம் சுவாமிகள் எங்கள் புதூர் ஊராட்சி நூலகத்தில் அல்லது திருவாசல்பட்டம் என்றழைக்கப்படும் குளத்தின் கரையிலுள்ள புளியமரத்தின் அடியில் தங்குவார்கள்.சுவாமிகளை தேடிச்சென்று அவர்களிடம் கொடுப்பேன்.வாடா..உங்க அண்ணன் அருணாசலம் கொடுத்தனாடா என்றுகேட்டு மகிழ்ச்சியுடன் வாங்கிகொள்வார்கள்.பழக்கத்தில்,வழக்கத்தில் இருந்த முறையிலேயே எழுத்தை தொடர்கிறேன்.அண்ணனின் சகோதரிகளில்,அண்ணனின் எண்ணத்தின் குறிப்பறிந்து செயல்பட்ட திருமதி நாகலெட்சுமி ராமதாஸ் அவர்கள்,அவர்களுடைய திருமணத்திற்குமுன்,ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகள் திருவாசப்பட்ட குளக்கரையின் புளியமரத்தில்,குளித்தபின் வேட்டியை காயவைக்க கிளைநுனிகளில் கட்டியிருப்பார்கள்,அதனை கண்டவுடன் என்னை கூப்பிட்டு,பாலசுப்பு ..இந்த சாப்பாட்டை எடுத்து சென்று அண்ணனுடைய சுவாமியிடம் கொடு என்று கூறுவார்கள்.இப்பொழுதுதிருமதி நாகலெட்சுமி இராமதாஸ் அவர்கள் செல்வ வளத்தோடு சகலசௌபாக்யங்களுடனும் பேறுகள் பதினாறும் பெற்று சிறப்புடன் உள்ளார்கள்.சுவாமிகள் மாலையில் இரவு ஏழு மணிக்கு எங்கள் புதூர் பிடாரிஅம்மன் கோவிலுக்குவந்துvazhipattu ,அமர்ந்திருப்பார்கள்.அந்த காலத்தில் அந்த கோயில் எளிமையான ஒரு திருக்கோயில்.இப்பொழுது சுற்று மதில் சுவர்களுடன் சிறப்பாக அமைப்புடன் ஊர்மக்களால் கொண்டாடி வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது.இந்த கோவிலில் அண்ணன் சுவாமிகளிடம் வந்து,சுவாமியை வணங்கி,கோவில் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி தாயை   வணங்கி,பின் சுவாமியுடன் பேசி அளவளாவிக்கொண்டிருப்பார்கள்.அந்த காலகட்டத்தில் 1960  க்குமுன் அண்ணன் அவரகள் பள்ளிப்படிப்பை,நிறுத்திவிட்டு,மளிகைகடைவைத்து வியாபாரம் செய்துவந்தார்கள்.அண்ணனுக்கு அரிசி ஆலை(rice mill ) உண்டு.அதில் நெல் கொள்முதல் செய்து,அரிசியாக்கி,அரிசிமூட்டைகளை வெளிமாநிலங்களுக்கு (கேரளாவுக்கு)அனுப்பும் பெரிய வியாபாரமும் உண்டு.நான் இராணுவத்தில் சேருவதற்குமுன்பு 1963 க்குமுன் பெரும்பகுதி நேரம் அண்ணனுடன் இருப்பேன்.அப்பொழுது இரவு நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது,சுவாமியைப்பற்றி கூறுகையில்,சுவாமி அவர்கள் பட்டதாரி,கல்விமான்,ஆன்மிகத்தின்மீது  ஏற்பட்டஈடுபாட்டால்,வங்கதேசத்து சுவாமிகளின் தீட்சையினால்,ஞானியாக பற்றற்ற வாழ்விணைகொண்டுள்ளார்கள்.இவர்களை தரிசிப்பது நாம் செய்த புண்ணியபலன்.இவர்களை வணங்கி ஆசிபெற்றால் செல்வம் பெருகும்,வாழ்வில் வளம்சேரும்,வியாபாரம் செழித்தோங்கும்,சுவாமிக்குநூறுவயதுக்குமேலிருக்கும்,காவியுடைகள் அணிந்து தன்னுடையஆன்மீகஈடுபாட்டை வெளிக்காட்டாமல்   கால்நடையாகவே ஆண்டாள்புரத்தில் இருந்துபுறப்பட்டு ,திருப்பூண்டி,மேலபிடாகை,திருக்குவளை வழியாக கொளப்பாடு மாரியம்மன் கோவிலில் தங்கி வழிபாட்டு,பின் உத்திரங்குடி,நால்ரோடு வழியாகபுதூர்(திருநெல்லிக்காவல்)வந்தடைவார்கள்.புதூரில் தங்கி,நமக்கு ஆசிர்வாதம் செய்து பின் திருக்கொள்ளிக்காடு,தட்டாங்கோயில்,பின் மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் தங்கி தரிசனம் செய்து புறப்படுவார்கள்.ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகளின் திருப்பெயரும் ராஜகோபால்(பி.எ )தான்.மன்னையிலிருந்து ஆரூர் சென்று ஸ்ரீதியாகேசனை வணங்கிப்பின் நாகை சௌந்தரராஜப்பெருமாள்,மாரியம்மனை தரிசித்து,வேளாங்கண்ணி வழியாக திருப்பூண்டி,ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருவின் திருவடி அருட்குடிலுக்கு செல்லும் என்று பெருமையோடு அண்ணன் சொல்வார்கள்.பாலு இவ்வளவு தூரத்தையும்,இந்த வயதில் கால்நடையாகவே செல்லும் சுவாமியின் சக்தியை பார்.!! என்று வியப்போடு கூறுவார்கள்.அண்ணனின் மளிகைக்கடை தொடங்கிய குறுகிய காலத்திலேயே வியாபாரம் நன்கு நடந்து சிறப்பாக வளர்ச்சிபெற்றது.அந்த காலகட்டத்திலேயே அண்ணன் ஸ்ரீமகாகாளியின் அருள் பெற்றிருந்தார்கள்.பிற்காலத்தில் ஸ்ரீ அண்ணனின் தெய்வநிலை அறிந்தவர்கள்,அண்ணனை அணுகும்போது அவர்கள் தொழில் செய்பவர்களாகஇருந்தால்,அவர்களை ஆண்டாள்புரம் சென்று,சுவாமியை தரிசித்து அருள்பெறும்படி கூறுவார்கள்.அவ்வாறு பல தொழிலில் சிறப்புற்று மேன்மையடைந்ததையும்
காணமுடிகிறது.1961 முதல் 1963 வரை ஊராட்சி நூலகத்திலே நான் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்தேன்.சுவாமி நுலகத்திண்ணையிலே அமர்ந்து,மஞ்சரி என்ற மாத இதழில் வரும்,மஹாபாரதக்கதையை படிக்க சொல்லி ,கேட்டு,லயித்து மகிழ்ச்சியுறும்.  இளமையில் வறுமை சூழலில் வாழ்ந்த நான் பள்ளிக்கு செல்லும்போது எனக்கு மதிய உணவிற்காக கொடுத்தனுப்பப்பட்ட தயிர் சாதம்,பலநாட்களில் பழையசோற்றில் தயிர் சேர்த்து கொடுக்கப்பட்ட உணவை,சுவாமியிருந்தால் அதனிடம் கொடுப்பேன்.சுவாமியும் கண்ணனாக,நாராயணனாக,ராஜகோபாலனாக நான்  (குசேலன்)கொடுத்ததை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளும்.ஞானிகள் மனதை மட்டும்தான் பார்க்கிறார்கள் என்பதை இப்பொழுதுநான்  உணர முடிகிறது.கல்விப்படிப்பின்போது ஒருமுறை பெயில்(fail )  ஆகி விட்டேன்.பதினாருக்கும் குறைந்த வயது.அழுகையும் வருத்தமுமாக சுவாமியிடம் வந்து,உங்களுக்கு தொண்டு செய்த நான் பெயிலாகலாமா? என்று சிறுபிள்ளைத்தனமாக பேசினேன்.பறவையில்லைடா என்று கூறியது.ஞானியின் வாக்கு பொய்க்காது.

1963 இல் இராணுவத்திலே (தொழில்பிரிவு இ எம் இ )சேர்ந்து பல்வேறு நிலையிலுள்ள இராணுவக்கல்வி (army  education )  யில் தேர்ச்சிபெற்று 1978 லே டிப்ளமோ இன் ஆட்டோமொபைல் பட்டயம் பெற்றேன்.இராணுவத்திலே இளநிலை அதிகாரியாக (junior  commissioned  officer )சுபேதார் வரையில் பதவி பெற்று ஓய்வு பெற்றபின்பும் சிறந்த பணிக்காக சுபேதார் மேஜராகவும் பதவி உயர்வுதந்த்து கௌரவிக்கப்பட்டுள்ளேன்.இவைகளில் கல்வியில் எனக்கு சுவாமி வாக்கு தந்த பட்டயம் ஒப்பு உயர்வு அற்றதாக மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

சுவாமியின் அருள் என்றும் நமக்கிருக்க ஆசி வேண்டுகிறேன்.

ஆசிபெற்ற
பாலசுப்ரமணியம்
  . 
  --------- o ---------    .   
  . 

 

பரமகுரு பூர்வாசிரம குடும்ப தகவல்


தகப்பனார் :                   குப்புசாமி தேவர்
  முதலியார் தெரு, மணக்குடி
                                          தலைஞாயிறு

தாயார்:  பொன்னம்மாள்

சகோதரர்:  கனகரெத்தினம்

சகோதரிகள்:  ராஜாமணி அம்மாள் ---மன்னார்குடி
  தனபாக்கியம்--- ராஜமாணிக்கம்---நீதிதாசன்---புலிவலம்
  அஞ்சம்மாள் ---- பாமணி

பிறந்த இடம் :  மணக்குடி,தலைஞாயிறு

படித்த இடம்:  ஜூனியர் கேம்பிரிட்ஜ்--இலங்கை   

சுவாமிகள் இலங்கை ஜூனியர் கேம்பிரிட்ஜில்  படிக்கும் காலத்தில் வங்கதேசத்து எஜமானின் உபதேசம் பெற்று வவுனியா காட்டில் தவம் செய்து ஆதிகுருவின் உத்திரவோடு ஆண்டாள்புரம் ஆதிகுரு பீடத்தில் வந்து தங்கி தவமேற்றினார்கள்.கோமலில் ஜீவா சமாதி அடைந்தார்கள்.அருணாலயத்தில் பரமகுருவின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. 

------------- o ---------------

 

கோ.வீ.மூர்த்தி
புதூர்

வாழ்க்கையில் இளமைக்காலம் என்பது மிகவும் சந்தோசமானதுதான், அதிலும் நெஞ்சைஉலுக்கும் நிகழ்ச்சிகள் நம்மனதில் பசுமரத்தாணிபோல் அடிமனதில் சுவடாகிவிடுவது போல்,சுவாமிஜி அவர்களின் நினைவுகளை தங்களோடு இதன்முலம் பரிமாறிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு, தாங்களும் மெய்ஞ்ஞானத்தை அறியவும் அடையவும் வழிவகுக்கும்.
 
தாயின் ஸ்பரிசம்,தந்தையின் அரவணைப்பு,ஆரம்ப கல்வி புகட்டிய ஆசான் அவர்களை மறக்க முடியாதோ அதே போல்தான் குருமஹாராஜ் அவர்களை என் சுவாசமாகவே சுவாசிக்கிறேன்."ஒன்றாஉலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் "என்ற வள்ளுவரின் வாக்கின்படி இவ்வுலகில் ஒப்பற்ற உயர்ந்த அழிவில்லாத,மாற்று இல்லாத ஒன்று என்றால் புகழ் மட்டும் தான் நிலைத்து நிற்கும் ,மற்றவை யாவும் இல்லையென்பதை குருமஹாராஜ் அவர்கள் உணர்த்திவிட்டார்கள்.பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல் அல்லவா?

சுவாமிகள் தோற்றத்தில் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவராகவும் மா நிற மேனியும் வெண்தாடியுடன் ஐந்தரை அடி உயரமுள்ள மெலிந்த,தளர்ந்த தேகமும் கையில் இரண்டு அடி மூங்கில் கைத்தடியும் இடுப்பிற்கு கீழ் நான்குமுள  வேட்டியும்,மேனியை நான்குமுள வேட்டியைக்கொண்டு போர்த்தி கொள்வார்கள்.சுவாமிகளின் சிங்கமென நடையும்,சூரிய பார்வையும்,வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்பதை காட்டிக்கொடுத்து விடும்.சுவாமிஜி அவர்களை பல அன்பர்கள் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தும் இறுதியில் தோல்வியே கிட்டியது.பார்ப்பதற்கு ஸ்ரீரெட்டிபட்டி சுவாமிகள் போன்றே தெரியும்.   
 .   
 சுவாமி அவர்களின் பூர்விகம் இலங்கையென்றும் உறவுஎன்று சொல்லிக்கொள்ள மூன்றுதலைமுறைக்கு மேலுள்ள குடும்பம் மன்னையில்   இருப்பதாகவும், ஆசிரமத்திற்காக முப்பத்துக்குழி திடலை மட்டுமே பெற்றுக்கொண்டு கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி வயல்வெளி திடலில் ஆள் நடமாட்டமில்லாத அந்தஇடத்தில் பருக நீர்கூட கிடைக்காத அந்தப்பூமியில் தன்னந்தனியாக ஆடம்பரம் இன்றி மிகவும் எளிமையான பிரம்மச்சரிய வாழ்வு வாழ்ந்த இடம்தான் ஆண்டாள்புரம் என்கிற சிந்தாமணி கிராமம்.ஆரம்பத்தில் சுவாமிகளுக்கு அதிக அளவில் எதிர்ப்புஇருந்தபோதிலும் அதையும் அன்பானமுறையில் மென்மையாக கையாண்டார்கள்,நாளடைவில் சுவாமிகளின் அருள் ஆசியையும் பெற்று வந்தார்கள்.மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஆசிரமத்தில் தங்கி மற்ற நாட்களில் ஆலயதரிசனம் என்று நடைப்பயணமாகவே கோவில்களை தரிசனம் செய்துவருவார்கள்.குறிப்பாக காலை ஆறரை மணிக்கு ஆண்டாள்புரத்திலுருந்து புறப்பட்டால் திருப்பூண்டி வழியாக வேளாங்கண்ணி மாதாவை வழிபட்டு நாகப்பட்டினம் நீலா அம்மன்,நாகூர் தர்கா,அங்கிருந்து ஆரூர் சென்று ஸ்ரீ தியாகேசன்-கமலாம்பாள் தரிசனம் செய்து முடிக்கும்போது இரவுஎட்டுமணி.மறுநாள் காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு மாலை ஐந்து மணிக்கு மண்ணை ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் -செங்கமல தாயாரை வணங்கிவிட்டு இரவு கழித்து,காலை மன்னையிலிருந்து புறப்பட்டு திருக்கொள்ளிக்காடு வழியாக புதூர் வந்தடைவார்கள்.மறுநாள் காலை ஆறுமணிக்கு புறப்பட்டு எட்டுக்குடி,வல்லம்,திருக்குவளை,வாழக்கரை வழியாக மாலை நான்கு மணிக்கு குருஷேத்திரம் சென்று அடைவார்கள்.எல்லா ஆலயங்களிலும் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு செல்வார்கள் என்பதை அறியமுடியும்.சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகள் எந்தஆடம்பரமின்றி பிறரறியாவண்ணம் நடைப்பயணமாக,பகலிரவு பாராமல் ,மழை-வெய்யிலை துணைக்கு அழைத்துக்கொண்டு "ராமா ராமா"என்று மட்டும் பாடிக்கொண்டு பயணிப்பார்கள்.   
 

சுவாமிகளிடம் வரும் பக்தர்களுக்கும்,அன்பர்கட்கும் அருளாசி வழங்குவது சற்று வியப்பை ஏற்படுத்தும் தன்னைப்பற்றி யாரும் அவ்வளவு எளிதில் அறியாவண்ணம் கொண்டு அவர்களின் சொல்லும்,இருபொருட்பட பேசியும்,இடையில் சிற்சில சேஷ்டைகளும் செய்வார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக பல இராமாயண  கதைகளை சொல்லும்போது அதன் உட்கருவை அறியாவண்ணம் காமெடி
கதைகளும் சொல்லி அன்பர்க்கு விளக்கமும் அளிப்பார்கள்.ஆதலால் சுவாமியை பற்றி ஓரளவு புரிந்தவர்களிடமே பேசுவார்கள்,மற்றவர்கள் எளிதில் அருகே செல்ல முடியாது.பள்ளி செல்லும் சிறுவர்களிடம் அதிகமாகவே பேசி மகிழ்வித்து பணமும் கொடுத்து உதவுவார்கள்.

  இவ்வாறாக என் இளமை பருவத்தில் பள்ளிசென்று திரும்பும்போது ஸ்ரீ இராமநாத சுவாமி-பிடாரிஅம்மன் திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்துகொண்டு என்போன்ற சிறுவர்கட்க்கு இராமாயண கதைகளை வேடிக்கையாகவும்,விசித்திரகமாகவும் சொல்வதோடுஇல்லாமல் மிட்டாய் வாங்கிக்கொள்ள பணமும் கொடுப்பார்கள்.ஆகவே சுவாமிஜி எப்போது வந்தாலும் பணம் கிடைக்கும் என்பதால் சுவாமிகளிடம் பனி செய்யமுன் வந்தேன்,பின்னாளில்தான் புதூர் ஸ்ரீஅருணாசல சுவாமிகளின் குருஜி என்பதை உணர்ந்த பின்பு அவர்கட்கு உளமார்ந்த சேவை புரிவதை லட்சியமாககருதினேன்.சுவாமிகளுக்கு சேவை செய்வதையே தம் வாழ்வின் இலக்கணமாக வகுத்து வாழ்ந்து வருபவர்களையும் இவ்விடம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஆரூர்மாஸ்டர் என்கிற பழனி,வேதாசல சுவாமிகள்,சுவாமிநாதன்,கலியபெருமாள்,சோலைமுத்து,பாண்டியன்,தேவதாஸ்,அம்பி,மணி,பால்வண்ணன்,முருகையன்,சீத்தாராமன் ,(உத்திரங்குடி),மாத்ருபூதம்,மாரங்குடி சீதாராமன்,அனந்த நாராயணன் ஆகியோர் சுவாமிகளிடம் உண்மையான சீடர்களாகவே வாழ்ந்தார்கள். 

 

ஒருமுறை புதூர் ஸ்ரீ அருணாசல சுவாமிகளின் ஆணைப்படி, இரவு பனிரெண்டு மணிக்கு புறப்பட்டு, வேதாசலம் அவர்களும் நானும் மிதிவண்டி மூலம் அதிகாலை நான்குமணிக்கு ஆண்டாள்புரம் நெருங்கியதும், சுவாமிஜி அவர்கள் குடிலைவிட்டு வெளியே வந்து,ஒடிந்த ஸ்டூலில் போர்வையோடு அந்த பனிக்காலத்தில் இராமபிரானை பாடியது எங்களை மெய் மறக்க செய்தது.பல நீண்ட உரையாடலுக்கு பின்பு சுவாமிஜி ஓர்உத்திரவை பிறப்பித்தார்கள்.எனக்கு பிறகு இந்த குரு பீடத்தில் மோட்ச ஒளி விளக்கு ஏற்றும் தகுதி இந்த தேவன் வேதாசலத்திற்கே என்று உத்திரவு இடுகிறேன் என்று சொன்னார்கள்.அதுமுதல் இதுநாள்வரையிலும் சுவாமிகளின் நிழலாகவே அவர்கள் இட்ட கட்டளைப்படி பாதை மாறாமல் மிகப்பெரிய உயரிய பதவியில் இருந்து தன்னை நாடிவரும் பக்தர்கட்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடர்க்கு என்பதன் பொருளாகவே வாழ்ந்து வருகிறார்கள். 

 

நவராத்ரி கொலு நாளில் மாஸ்டர் என்கிற பழனியும் நானும் காலை ஐந்துமணிக்கு ஆண்டாள்புரம் சென்று சாமியை தரிசனம் செய்தோம் சுமார் ஆறரை மணிக்கு பழனியோடு சுவாமிகள் மன்னார்குடி செல்வதாகவும் நான்மட்டும் குருஷேத்திரத்தை ஒரு மாதம் காவல் காக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு ரூபாய் நூறும் இரண்டுபடி அரிசி,ஒருமண்பாத்திரத்தையும் கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்று வர பத்துநாட்கள் ஆகிவிட்டது.ஒவ்வொரு நாள் இரவும் ஊமை கண்ட கனவாகவே இன்ப வேதனையை அனுபவித்தேன்.சுவாமிகள் குருசந்நிதானம் காலை நான்கு மணிக்கு வந்தடைந்தும்சொற்போர் தொடங்கி நான் புதூர் சென்றே ஆகவேண்டும்.என்பதில் திண்ணமாக இருப்பதை உணர்ந்து "கண்ணன் வருவான்,அழைத்து செல்வான்"என்று சொல்லிவிட்டு குடிலுக்கு சென்று விட்டார்கள்.மாலை ஐந்தரை மணிக்கு புலிவலம் கண்ணன் வந்தார்,என்னை அழைத்து சென்றார்கள்.அப்போது கூட நான் பேசிய வார்த்தைகளை மறந்து தம் குழந்தையாகவே பாவித்து இன்னும் பதினைந்து நாட்கள் தங்கினால் குருவிற்குச்செய்ய வேண்டிய கடமை முழுமை அடைவதாகவும்,இத்தருணத்தை தவறவிட்டால்  இப்பிறவியில் இனி என்னோடு இங்கு வந்து தங்க முடியாது என்றும்
வலியுறுத்தி கூறியும் ஊழின் பெருவளியாவுள என்பதை மெய்யாக்கி ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை இன்றும் உணர்ந்து வருந்துகிறேன். 

 

1982 மே மாதம் இருபத்தியிரண்டாம் தேதி சுவாமிகள் காலை ஏழு மணிக்கு ஆண்டாள்புரம் புறப்பட்டு வாழக்கரை வழியாக கொளப்பாடு வந்தடைந்ததும் கச்சனகரம்  வழியாக பயணத்தை தொடர்ந்தார்கள்.திடீரென்று சற்றும் எதிர்பாராதவகையில் மயக்கநிலையில் கீழே விழுந்து விட்டார்கள்.உடனே சுவாமிகளை தோளில் போட்டு தூக்கிக்கொண்டு ஒரு மரத்தடியில் படுக்க வைத்து
விட்டு தண்ணீர் எடுத்துவந்து மடியில் சாய்த்து நீரை தெளித்து சற்று வாய்  வழியாக தண்ணீர் குடித்ததும் மான் குட்டிபோல் துள்ளிக்குதித்து நடைப்பயணத்தை மேற்கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதுவும் ஒன்றே சொல்லலாம்.   
 

 

திருமூலரின் வாக்குப்படி நாய்போல் திரிந்து, நரிபோல் உழன்று, சேய்போல் இருப்பர், உண்மை ஞானம் தெரிந்தவரே. முற்றும் துறந்த துறவியாக,மாமுனிவராக,சிறந்த தவசியாக இந்த லோகத்தின் சக்ரவர்த்தியாக, தேசத்தின் முதல் குருவாக, காலத்தின் முதல் பிச்சைக்காரனாக,முக்காலத்தையும் வென்று பஞ்சபூதங்களின் அவதாரமாக,அவதரித்தவர் இந்த ஆதிபகவான் என்பதை உணர்ந்தேன்.

 

"உற்ற நோய் நீக்கி,உரூ அமை முற்காக்கும் பெற்றியார் பேணி கொளல்."

கோ.வீ.மூர்த்தி
 

---------- o -----------

 

 

செவித்தியநாடார்
திருத்தங்கூர்

நான் கிறிஸ்துவன்.என்னுடைய பத்து வத்திலிருந்து சாமியைப்பற்றி எனக்குத்தெரியும். எனக்கும் சாமிக்கும்  நண்பர்களை போன்ற பழக்கம்.பணத்தை விரும்பாதவர்கள்.அவர்கள் கொடுக்கும் விபூதியில் பல நோய்கள் சரியாகின.ஆனால் அதற்காக சுவாமிகள் கொடுக்கப்பட்ட எந்த காணிக்கையையும் பெற்றுக்கொள்ளவில்லை.சாமியை போட்டோ எடுக்க விரும்பி சிலர் போட்டோ எடுத்தார்கள்.ஆனால் சாமியின் படம் அதில் விழவில்லை.எந்த வாகனங்களிலும் ஏறுவதில்லை.செல்லும் இடம் எல்லாம் நடைப்பயணமாகவே சென்றார்கள்.என்னை எப்போதும் அந்தோணிசாமி என்கிற முழுப்பெயரை சொல்லித்தான் அழைப்பார்கள்.என் சொந்த வாழ்வில் மனம் மிகவும் குழம்பிய நிலையிலிருந்தபோது சாமி எனக்கு சொன்ன வார்த்தைகள் என் குழப்ப நிலையிலிருந்து உடனடியாக விடுவித்தது,இன்றும் நினைத்து பார்க்கிறேன்.

செவித்திய நாடார். 

 

------------- o --------------

சிவானந்தம்
த/பெ வைத்தியநாதன்
பவுத்திரமாணிக்கம்
9600820882 /9488780915

என் தந்தையை அழைத்து நாயுருவி இலையை வீட்டின் பின்புறத்திலிருந்து எடுத்து கொடுத்து பூஜிக்க சொன்னார்கள்.அதன்பிறகு என்தந்தை சிறந்த சித்த மருத்துவராக மாறினார்.பரணிஸ்டூடியோ எடுத்த 10 படங்களுக்கு எடிட்டராக இருந்தவருக்கு முதுகுவலி,அதற்காக சாமியிடம் வேண்டினேன்.எனக்கு மனதுக்கு வந்த திசையில் பார்த்தபோது சில வாழைமரங்களுக்கிடையே மூலிகை கிடைத்தது.இரண்டு மணி நேரத்தில் குணமடைந்தார்.
 
தெருக்கடைசியில் மாரிமுத்து நாடார் மகன் சரவணன் சாமி படுத்திருக்கும் இடத்தை எட்டி பார்த்திருக்கிறார்.சாமி உடல் தனித்தனியாக கிடந்திருக்கிறார். சரவணன் சத்தமிட்டார்.ஒருவாரம் பிறகு வந்த சாமி,பாதுகாப்பில்லை,வரமாட்டேன் என்றாரகள்.சிறிது காலம் வரவில்லை.நீண்ட நாள் ப்ரார்தனைக்குப்பிறகு ஒருநாள் மீண்டும் வந்தருளினார்கள்.அவர்கள் அனுக்கிரகத்தால் ஒவ்வொருநாளும் அவர்களின் அருளாசியை உணர்கிறேன்.வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் புரிந்துகொள்ளவும்,இறைவனை பற்றுவதற்கும், அதற்காக தயார்படுத்தி கொள்ளவும் செய்தார்கள்.

சிவானந்தம்  

-------- o ---------

 

 

திருமதி கஸ்தூரி அம்மாள்
வல்லம்

சுவாமி எங்கள் வீட்டின் சார்ப்பில் வந்து தங்குவார்கள்.என் கணவரை "டேய்...பட்டமணியான்"சாப்பாடுஎடுத்து வாடா என்பார்கள்.நான்போய் குளித்துவிட்டு சுவாமிக்கு சாப்பாடு கொண்டுவைத்துக்கொண்டு வருவேன்.சுவாமியின் பாதங்கள் ஒரு குழந்தையின்பாதங்களைப்போல்   இருக்கும்.எங்கு போனாலும் நடந்தே போகும் சுவாமிகளின் பாதங்கள் எப்படி இவ்வளவு தூய்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது என்று நான் ஆச்சரியம் அடைந்து இருக்கிறேன்.அவர்கள் குளித்து நான் பார்த்தது இல்லை.ஆனால் அவர்கள் மீது வியர்வை வாடையோ வேறு ஏதும் துர்வாடையோ வந்தது இல்லை.வீட்டைவிட்டு கிளம்பும்போது டேய் பணம் குடுடா என்பார்கள்.ஆனால் அவர்கள் கையால் அதை வாங்க மாட்டார்கள்,கூடவருபவர்கள்யாராவது வாங்கிக்கொள்வார்கள்.
ஒருமுறை காரபிடாகையில்  சுவாமியின்மீது அவதூறாக சாராயம் காய்ச்சுவதாக வதந்தியை யாரோ கிளம்பி விட்டு விட்டார்கள்.நாகை டி.எஸ்.பி. சிவதாஸ்மீனா என்ற போலீஸ் அதிகாரி சுவாமியை விசாரிக்க சென்று உள்ளார்,அப்போது சுவாமி "வாடா சிவதாஸ்  எப்படி இருக்கே" என்று கேட்டவுடன் சிவதாஸ்மீனா அதிர்ந்துபோய் திரும்பிவிட்டார்கள்.மேலும் நான் செய்த பாக்கியம் நான் எடுத்து கொடுத்த வேஷ்டியைத்தான்   சுவாமி சமாதி அடைந்தபோது அணிந்து இருந்தார்கள். 
 

கஸ்தூரி  அம்மாள்

 

-------- o ----------

 

திரு.நற்பவீ அவர்கள்
திருமலைராயன்பட்டினம்

ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகளை நான் சந்தித்து அருள்பெற்றது 1982 ஆம் ஆண்டு,ஆனால் அவர்களை எனது பாட்டனார் திரு.ராஜேஸ்வரய்யர் சந்தித்தது எங்கள் குடும்பத்திற்கு ஸ்ரீசுவாமி அருள்பலித்தது 1901.ஏனெனில் எனக்கு தெரிந்து ஸ்ரீசுவாமிகளின் வயது 170 ஆவது இருக்கும் என நினைக்கிறேன்.அனாலும் இதை மனித உலகில் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது தெரியும்.
எனது தாத்தா,அப்பா,நான் என மூன்று தலைமுறைகள் சுவாமியை வணங்கிவருகிறோம்.

முன்பு நாங்கள் இருந்த வாடகை வீட்டில் சுவாமி மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள்.அப்போது விரைவில் சொந்த இடம் அமையும் என்று அருளினார்கள்.சொன்னதுபோலவே வடிவேல் பிள்ளை இடம் கொடுத்தார்.ஒருமுறை சுவாமி குளத்தில் ஏழு நிமிடம் தண்ணீருக்குள் இருப்பதை கண்டு அறிந்தேன்.புதூர் அண்ணன் சுவாமிகளை மூன்று முறை சந்தித்து இருக்கிறேன்.

சுவாமி என்னிடம் தேடிய பொருள் ,பழனிக்கு போ கிடைக்கும் என்றார்கள்,அங்கு மூன்று வரி பாடல் கொண்ட நூல் எனக்கு கிடைத்தது.இருபது முறைக்குமேல் திடலுக்கு சென்று இருக்கிறேன்,மூன்றாவது முறை எனக்கு குடம் கொடுத்தது நினைவிருக்கிறது.

அந்த மஹாபுருஷரை வணங்குகிறேன்.

நற்பவீ. 

 

---------- o ------------

 

 

 

எஸ் .பக்கிரிசாமி (மா.பொ.சி)
புதூர்

ஸ்ரீராம்,ஸ்ரீராம்,ஸ்ரீராம்.
முழுபிரம்மச்சரியத்தை முழுமையாக அனுஷ்டித்து முக்திபெற்றுசித்திபெற்றவள்ளலார்ஸ்ரீலஸ்ரீ ஆண்டாள்புரம்,தவப்புதல்வர்,தவயோகி  ராஜகோபாலசுவாமிகள் வரலாற்றை எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் பூர்வஜென்ம புண்ணியம் செய்தவன் என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும் எனக்கும் நட்பு அதாவது ஆன்மிக நட்பு ஏற்பட்டு உள்ள காலம்  எனக்கு இருபத்திமூன்ராவது வயதில் ,இப்போது எனக்கு வயது என்பது,இந்த நிலையில் என்னுடைய அனுபவத்தில் மிகப்பெரியவங்க என்பதை என்னுடைய சிற்றறிவுக்கு  சுட்டிக்காட்டுகின்ற வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்திருக்கின்றதை நினைத்து நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தப்படுகின்றேன்.ஆன்மிக தத்துவத்தின் மூத்தமகன் ஆண்டாள்புரம் ஐயா அவர்கள் இடத்தில் ஆன்மிக வரலாற்றை பேசிமுடிக்க மூன்று ஜென்மங்கள் எடுக்க வேண்டும்.அதை அல்லாது வேல்டு விவகாரங்களை பேசிமுடிக்க நான்கு ஜென்மம் எடுக்கவேண்டும்.ஐயா அவர்கள் ஒரு பட்டதாரி என்பதை அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பு நமக்கு சுட்டிக்காட்டும் என்பதை குறிப்பிடுகிறேன்.தவயோகி ஆண்டாள்புரம் சுவாமிகள் துறவிக்கு வேந்தன் துரும்பு என்ற பொன்மொழிக்கு உயிர் ஊட்டியவர்கள் ஐயா அவர்கள்.நான்கு முழ வேட்டி இடுப்பில் அணிந்து,இன்னொரு நான்குமுள வேட்டியை போர்த்தி இருப்பார்கள்.ஐயாவிற்கு பிடித்தமானது காராசேவை,டீயில் கொட்டிஊதி   சாப்பிடுவதும்,வெறும் புகையிலையை வாயில் அடக்கி கொள்வதும் நீண்டதூரம் நடந்து செல்வதும்.மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு பல்வேறு தெய்வங்களின் வணக்கங்கள் இருந்தாலும் ஸ்ரீராமபிரானின் மெய்க்காப்பாளராகிய பஞ்சமுக ஆஞ்சநேயர் வணக்கம் தான் பிரதானமாகஇருந்தது என்று தெரியப்படுகிறது.கொளப்பாட்டில்காசுக்கடை பக்கிரிசாமி பத்தர் மிக நெருக்கமான தொண்டர்.அவர்தான் ஐயாவுக்கு வருடத்தில் இரண்டு தடவை வேட்டிகள்  எடுத்துக்கொடுப்பார்.ராஜரிஷி தவமுனி விஷ்வாமித்திரரைப்போல் உள்ளவர்கள் என்று எனது சிற்றறிவுக்கு தோன்றுகிறது. ஐயாவின் சொந்த ஊர் திருப்பூண்டிஎன்றும் ஐயாவினுடைய தகப்பனார்பெயர் குப்புசாமி தேவர் என்றும் கேள்வி.மதிப்பிற்குரிய அய்யா அவர்கள் வெளிநாட்டில் அவதரித்தவர்கள் என்றும் மீண்டும் ஆண்டாள்புரத்தில் பிரவேசித்தார்கள் என்றும் சுவாமிகள் தியானத்தில் இருந்த இடம்,ஆண்டாள் கோவில் இருந்து மறைந்த இடம்.அய்யாவின் வரலாற்றை எழுத என்ன தவம் செய்துவிட்டேன் என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்கிறேன்.

எஸ்.பக்கிரிசாமி

  ------- o -------- 
 

 

எஸ்.சுசீலா
க/பெ சந்திரகிரி
மேல வாழக்கரை
25 /04 //2012

ஸ்ரீராமஜெயம்
மேலவாழக்கரையில் சில இடங்களில் ஆண்டாள்புரத்து சாமிகளை பார்த்தால் நன்மைகிடைக்கும் என்கிறார்களே,வாருங்கள்போய்   ஆண்டாள்புரம் சென்று வருவோம் என்று நாங்கள் இருவரும் எங்க கடைசி பையன்,இப்போது நாற்பத்தைந்து வயதாகிறது,அவன்,ஆறுமாத பையனை தூக்கிக்கொண்டு அவர்களிடம் சென்றோம்.பதினைந்து அடி தூரத்தில் வரும்போதே எங்களை பார்க்காமலே எங்கள் பெயர் சொல்லி அழைத்தார்கள்.நல்லாயிருப்பீர்கள் என்று ஆசிர்வாதம் செய்தார்கள்.அதன்பிறகு மூன்று பிள்ளைகளுக்கும் படிப்பும்,வேலையும்,திருமணமும் இனிதே நடந்தது.எங்கள் வீட்டில் வந்து தங்குவார்கள்,அப்போது புதூர் அண்ணன் சுவாமிகளும்,நெல்லிவனம் சுவாமிகளும் வருவார்கள்.என் மகன் முரளிதரனும் அவர்களுடன் நடந்தே மன்னார்குடி சென்று வருவான்.இன்றும் அவர்கள் ஆசியால் நன்றாக உள்ளோம்.கோமல் சென்று அவர்கள் சமாதியை தரிசனம் செய்து வருகிறேன்.

ராஜகோபால சுவாமிகள் அலைஸ் ஆண்டாள்புரம் சுவாமிகள்,என் ஆசிர்வாதம் என்று கடிதம் போடுவார்கள்.எங்கள் வீட்டிற்கு மாதம் மூன்று முறையாவது வந்து தங்குவார்கள்.அன்னம் செய்து தருவேன்,ஆசிர்வாதமும் அதிகம்.வெள்ளியில் தகடு செய்து ராமச்சக்ரம் போட்டு கொடுத்தார்கள்.அவரை யாரும் தொட்டோ,கிட்ட நெருங்கியோ பேசக்கூடாது.எங்கள் வீட்டில் தங்குவார்கள் ,இரவில் தூங்கும்போது அவர் வாயில் ஒளி பிரகாசிக்கும்.மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலுக்கும்,புதூர் அண்ணன் சுவாமி மில்லுக்கு சென்றுதான் வருவார்கள்.அவர் வயது 95 /100 இருக்கும்.வெகு நாட்களாக பார்க்கிறோம்.வாழக்கரை கண்கொடுத்த மாரியம்மன் கோவிலில் வந்து .அன்னம் பரிமாறுவோம்.வெளிநாட்டிலிருந்து ஐயா அவர்களுக்கு பணம் வரும்.அவர்கள் நல்லா  இருப்பாய் என்று ஆசிர்வாதம் செய்தவர்கள் தங்குவார். எல்லாம் நன்றாகத்தான் உள்ளார்கள்.வாழக்கரையில் ஒரு ஆசிரமம் எடுத்து அண்ணன் சுவாமிகள் தங்கினார்கள்,ஆண்டாள்புரத்து சுவாமிகளும் அண்ணனும் ஆத்மார்த்த குரு,சிஷ்யர்கள்.ஆண்டாள்புரத்து சாமிகள்,மன்னார்குடி பெரியகோவில் ராஜகோபால் சாமிக்கு வருசத்துக்கு ஒருமுறை ஒன்றேகால் லட்சம் ரூபாய் பணம் கப்பம்கட்டுவேன்  என்பார்கள்.எங்கு சென்றாலும் நடந்தே தான்செல்வார்.மூன்று நாளோ, நான்கு நாளோ படுத்து அடக்கம் ஆகிவிட்டார்கள்.

இப்படிக்கு
எஸ்.சுசீலா

  --------- o -----------  

 

டி.குணசேகரன்
சிந்தாமணி

ஆலங்குடி குப்புசாமித்தேவர் (இலங்கை கப்பல் வியாபாரம்)அவர்களின் மகன் அருள்திரு எஸ்.எஸ்.கே.ராஜகோபாலசுவாமிகள்.அவர் மனக்குடியில் பிறந்து இலங்கையில் படிப்பை முடித்து ஆண்டாள்புரத்தில் தான் துறவு வாழ்க்கையை ஆரம்பித்து,தான் வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணித்தார்.தான் வாழ்நாட்களில் பேருந்திலோ அல்லாது வேறு வாகனத்தில் செல்லாமல் நடந்தே கோவில்களுக்கு சென்று தான் இறைப்பணியை மேற்கொண்டார்.அதன்பிறகு திரு சுவாமிகளை சந்திக்க அதிகம்பேர் வருவார்கள்.திரு சுவாமிகளை சந்திக்க வரும் அனைவரும் சற்று தள்ளி நின்று தரிசிப்பார்கள்.சுவாமிகள் விபூதி பிரசாதத்தை மடித்து தூக்கி எறிவார்கள்,அதை சுவாமியை தரிசிக்க வரும் அனைவரும் எடுத்து செல்வார்கள்.புதூரில் இருந்து அருள்திரு அருணாச்சல சுவாமிகள்,வேதாச்சலம்,முருகையன்,பாஸ்கர்,சுவாமிநாதன்,நந்தகுமார்,பழனி,நெல்லிவனம்,மாதவன் ஆகியோர் மாட்டுவண்டியில் சுவாமியை தரிசிக்க வருவார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சுவாமிகளுடன் நடந்தே கோவில்களுக்கு செல்ல ஆரம்பித்தேன்.சிந்தாமணியிலிருந்து நடைபயணமாக திருப்பூண்டி மாரியம்மன் கோவிலுக்கு வருவோம்,அங்கிருந்து வேளாங்கண்ணி மாரியம்மன் கோவிலுக்கு செல்வோம்,அங்கிருந்து மாதா கோவிலுக்கு செல்வோம்,  அங்கிருந்து கல்லார் வழியாக நாகப்பட்டினம் பெருமாள் கோவிலுக்கு செல்வோம்.அங்கு தங்கியிருப்போம்.அங்கு பிரின்சிபால் ரங்கராஜன் ஐயர் அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் இருவருக்கும் சாப்பாடு வரும்,பிறகு அங்காளம்மன் கோவிலுக்கு செல்வோம்.பிறகு கே .எம். ஸ்டோர் முருகையன் வீட்டில் தங்குவோம்.சுந்தரராமன் டிரான்ஸ்போர்ட் செல்வோம்,பிறகு மறைமலை அச்சகம் செல்வோம்.அங்கிருந்து நாகூர் ஆண்டவர் கோவிலுக்கு செல்வோம்.அங்கிருந்து திருமலைராயன்பட்டினம் ஆயிரம்காளி கோவிலுக்கு செல்வோம்.அத்துடன் எங்கள் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி நாகை பெருமாள் கோவிலுக்கு வருவோம்,இரண்டு நாள் தங்கி பிறகு பாப்பாகோவில் வழியாக ,திருத்தனமங்கலம் வழியாக சென்று கருங்கண்ணி மாரியம்மன் கோவில் வருவோம்.அங்கு கண்ணையன் மாளிகையிலிருந்து எங்களுக்கு சாப்பாடு வரும்.பிறகு ஆண்டாள்புரம் வந்தடைவோம்.நான் காலை ஐந்து மணிக்கே அவருடைய இருப்பிடத்திற்கு சென்றுவிடுவேன்.அவருக்கு தண்ணீர் எடுத்துக்கொடுத்து ,சாப்பாடு வாங்கி கொடுப்பேன்.பத்து நாட்கள் ஆண்டாள்புரத்தில் தங்கியிருப்பேன்.பிறகு எங்கள் பாதயாத்திரையை தொடங்குவோம்,ஆண்டாள்புரத்திலிருந்து வயல் வழியாக நேரடியாக திருமனங்குடி மாதா கோவிலுக்கு செல்வோம்,பிறகு மீனம்பநல்லூர் மாதா கோவிலுக்கு செல்வோம்.வாழக்கரை  சொக்கநாதர் கோவிலில் தங்குவோம்.பிறகு நகைப்பாட்டினத்தார் கடையில் இருந்து சாப்பாடு வரும்.இரவு லஷ்கர் சுப்ரமணியம் வீட்டிலிருந்து சாப்பாடு வரும்.இரவு போஸ்ட்மேன் சந்திரகிரி வீட்டில் தங்குவோம்.பிறகு திருக்குவளை அங்காளம்மன் கோவிலுக்கு செல்வோம்,அங்கு ஒருநாள் தங்குவோம்.பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு செல்வோம்,அங்கு கைலாச ஐயர் வீட்டில் தங்குவோம்.அடுத்தநாள் திருக்குவளை வழியாக கொளப்பாடு மாரியம்மன் கோவிலுக்கு செல்வோம்.பிறகு நால்ரோடு வழியாக புதூர் சின்னமில் சென்றடைவோம்.அங்கு நான்கு நாட்கள் தங்குவோம்.திரு அருணாச்சல சுவாமிகள் வீட்டிலிருந்து சப்படுவரும்.இதுபோல நாங்கள் கால்நடையாக அணைத்து கோவில்களுக்கும் சென்றுவருவோம்.நாங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் எங்களை எதிர்பார்த்து பூஜைகள் நடப்பதுபோல் அங்குநடக்கும்,எங்களுக்கும் தரிசனம் கிடைக்கும்.எத்தனையோ பேர் திரு சுவாமிகளின் அருள் பெற்று நன்மை அடைந்துள்ளனர். அவர்கள் பேய் பிடித்த பெண்ணை காப்பாற்றினார்கள் .

மீனம்பநல்லூரில் சுவாமிக்கு மயக்கம் வந்து இரவு முழுவதும் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டது வாழ்வில் பெற்ற பேறுகளுள் ஒன்று.    .
டி.குணசேகரன் 

-------- o ---------

 

சண்முகவேல்
புதூர்

சாமிகளை பத்துவயதில் முதன்முதலில் பார்த்தேன்.சாமிகள் திருவாசப்பட்டதிலுள்ள புளிய மரத்தடியில் தங்குவது வழக்கம்.புதூர் ஐயா இட்லி,டீ ,பன்,புகையிலை ஆகியவற்றை சாமியிடம் கொடுக்கச்சொல்லி கொடுப்பார்கள்.நான் சென்று கொடுப்பேன்.சிறுகுவளையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருக்கிறேன் .எனக்கு இரண்டரை அனா காசு கொடுப்பார்கள்.அங்கிருந்து இரவில் பிடரிக்கோயிலில் தங்குவார்கள்.சாமியை புதூர் ஐயா இரவில் வந்து சந்திப்பார்கள்.புதூர் மில்லில் சாமிக்காக கட்டப்பட்டிருந்த கொட்டகையில் வந்து தங்குவார்கள்.இங்கிருந்து புறப்பட்டு மன்னார்குடி செல்வது வழக்கம்.எனக்கு அறுபது வயதிருக்கும்போதும் பத்து வயதில் பார்த்தது போலவே இருந்தார்கள்.புதூர் ஐயா சமாதியானபிறகு சாமி புதூர் வந்தார்கள்,வணங்கினேன்.நல்ல இருப்படா போடா என்று ஆசிர்வதித்தார்கள்.அதுவே நான் சாமியை கடைசியாக தரிசித்தது. 

 

சண்முகவேல்

 

-------------o---------------

 

 

மாஸ்டர் க.சண்முகசுந்தரம்
தெற்கு தெரு
செருவாமணி 
9655634469 


சித்தர் மயம்


மாஸ்டர் என்கிற சண்முகசுந்தரமாகிய நான் 1986 லிருந்து இன்றுவரை திருநெல்லிக்காவல் அருகில் உள்ள செருவாமணியில் வசித்துவருகிறேன்.எனது சொந்த ஊர் வேதாரண்யம் தாலூக்காவிலுள்ள தலைஞாயிறு, கோவில்பத்து கிராமத்தில் எனது தாத்தா எஸ்.சேதுப்பிள்ளை ,1924 லிருந்து வட்டம் கர்ணம் (வி.ஏ .ஓ) வாக வேலைசெய்து வந்தார்.அந்த காலத்தில் மகான் சிந்தாமணி சாமி அவர்கள் எங்கள் வீட்டில் தங்கி ஒருவருட காலம் இருந்தார்கள்.1946 ல்  சாமி என் அப்பா கணபதிபிள்ளையிடம் இரண்டு வருடம் கழித்து இந்த ஊரில் காலரா நோய் வரப்போகிறது.நான் மருந்து தந்துவிட்டு போகிறேன்,நீ வைத்தியம் செய் ,நூற்றுக்கு தொண்ணூறு பேரை பிழைக்க வைத்துவிடலாம்,நீயோ கல்யாணமாகாதவன் ஆதலால் இரவு,பகல் என்று பாராமல் வைத்தியம் செய் என்றார் சாமி.என் அப்பாவும் சாமி அவர்கள் சொன்னதுபோல் எல்லோருக்கும் வைத்தியம் பார்த்து பிழைக்கவைத்துவிட்டார்கள்.


என் அப்பாவுக்கு கலியாணம் செய்துவைத்துவிட்டு,என் தாத்தா காலமானார்.என் அப்பா,தாத்தா பார்த்துவந்த அதே வேலையை பார்த்தார்.தாத்தா வாழ்ந்த ,இப்போது பஞ்சாயத்து  ஆபீஸ் இருக்குமிடத்திற்கு கிழக்கே உள்ள மனையை கண்ணையன் டாக்டரிடம் விற்றுவிட்டு நங்கள் இப்பொழுது சொசைட்டி இருக்குமிடத்திற்கு அருகில் குடியிருந்தோம்.எங்கள் வீட்டில் என் அம்மா மீனாட்சிசுந்தரமும் ,என் தங்கை சுந்தரி,அப்பா நால்வரும் இருந்தோம்.எங்க அப்பாவிடம் கிராம பணியாளர் வேலையை வடிவேல் பண்டாரம் என்பவர் வேலை பார்த்து வந்தார்.அவருக்கு வயது அறுபது இருக்கும்,அவர் என் தாத்தாவிடமும்,தாத்தாவோட மாமா நடேசபிள்ளையிடமும் சார்பு வேலை பார்த்தவர்.அந்த சமயம் எங்கள் வீட்டிற்கு சிந்தாமணி சாமி வந்திருந்தார்கள்,அப்போது எனக்கு வயது பத்துஇருக்கும்  (1959 /60 ),எங்கள் வீட்டில் சாமி தங்கி இருப்பார்,சாமி காலையில் எழுந்தவுடன் ,எங்கள் வீட்டிற்கு சார்பு வருவார்,அவரை அழைத்துக்கொண்டு கடலுக்கு போய் குளித்துவிட்டு வருவார்கள்.எங்கள் வீட்டிலிருந்து கடற்கரை அரைகிலோமீட்டர் இருக்கும்.சாமி திரும்பிவரும்போது கார்த்திகை கிழங்கை தின்றுகொண்டுவருவார்.இதுதான் சாமிக்கு காலை டிபன்.அந்த கார்த்திகை கிழங்கை பறித்துக்கொடுப்பவர் எங்கள் வடிவேலு பண்டாரம்தான்.கார்த்திகை கிழங்கு என்பது விஷச்செடி,அதன் கிழங்கு கலப்பை வடிவத்திலிருப்பதால்,அதற்கு கலப்பை கிழங்கு என்றுபெயர்,நெஞ்சு அடைப்பான்,கண்ணோவு செடி என்று பல பெயர்கள் உள்ளன.ஆனால் சாதாரண மனிதர்கள் அந்த கிழங்கை அரைத்து சாப்பிட்டால் சாவுதான்,பிழைக்கவைக்க முடியாது,அவ்வளவு நஞ்சுள்ள கிழங்கு.சாமி அதை காலை உணவாக உட்கொள்வார்கள்,அதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டுஇருக்கிறேன்.

பிறகு எங்க அப்பாவும் சாமியும் எங்கேயாவது வெளியே சென்றுவிடுவார்கள்,மதியம்தான்வீட்டுக்கு வருவார்கள்.எங்க வீட்டில் அம்மா சாப்பாடு செய்து இருப்பார்கள்.இருவரும் வந்தவுடன் தென்னையோலையை பறித்துவந்து தொன்னைபோல் இலை தைப்பார்கள்.சாமியும்,அப்பாவும் சாப்பிடுவார்கள்.நம்மைப்போல் சாம்பார்,ரசம்,மோர் என்று எல்லாம் சாப்பிடுவார்கள்,அவர்களுக்கு கார்த்திகை கிழங்கு ஒன்றும் செய்துவிடாது..           சாப்பிட்டபிறகு சாமி எங்கள் வீட்டின் வாசலிலுள்ள மரத்தின் நிழலில் பெஞ்சுபோட்டு படுத்திருப்பார்கள்.மாலைவந்ததும் சாமியும்,அப்பாவும் சென்று விடுவார்கள்,இரவுதான் வருவார்கள்.நான் சிறுவன் என்ற காரணத்தால் முன்கூட்டியே தூங்கிவிடுவேன்.சாமி எப்போது வருவார்கள் என்பது எனக்கு தெரியாது.காலையில் தான் சாமி எழுந்து கடலுக்கு போவதை பார்ப்பேன்.சாமி தினம் கடலில் குளிப்பார்,தினம் கார்த்திகை கிழங்கை சாப்பிடுவார்.இதுமாதிரி தினம்,தினம் நடக்கும்.ஒரு மாதம் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்,பிறகு எங்கேயோ சென்று விட்டார்கள்.

நான் தேவூரில் வேலைபாத்துக்கொண்டிருக்கும்போது திருப்பூண்டி வழியாக காமேஸ்வரம் செல்வேன்.என் தங்கை சுந்தரி, காமேஸ்வரம் ராமநாத முதலியார், தம்பி கச்சியப்பன் ஒன்றாக இருந்தார்கள்.சில வருடங்களுக்கு முன் என் அப்பாவும்,அம்மாவும் இறந்துவிட்டார்கள்.ராமநாத முதலியார் சிந்தாமணிசாமி ,சிந்தாமணியில் தங்கியிருப்பதாக சொன்னார்.அவர் ஒரு சமயம் திருப்பூண்டி மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்திருந்த சிந்தாமணி சாமிக்கு டீ வாங்கி கொடுத்திருக்கிறார் ,சாமி எங்கே போகிறாய் என்று கேட்டிருக்கிறார்,அதற்கு  ராமநாதன் எட்டுக்குடி செல்கிறேன் என்று கூறி நான் பஸ்ஸுக்கு போகிறேன் என்று சென்றுவிட்டார்கள்.எட்டுக்குடியில் ராமநாதமுதலியார் பஸ்சைவிட்டு இறங்கும்போது சிந்தாமணி சாமி அவர்கள் கோவிலில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.சாமியை முதலியார் என்ன சாமி என்று வினவ,முதலியாரை போ,போ என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.          ராமநாதமுதலியார் அவர்களை பார்க்கப்போனபோது இந்த செய்தியை சொன்னார்கள். சாமி ஊரில் இருந்தால் அவர் தங்கியிருக்கும் இடத்தில் மரத்தில் வேட்டிகாய்ந்து கொண்டிருக்கும் என்றார்கள்,நான் இரண்டுமுறை பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்,ஆனால் முடியவில்லை.நான் சிந்தாமணிக்கும் போகவில்லை.பின்னாளில் என் தங்கைக்கு கல்யாணம் முடிந்துவிட்டது. நானும் கல்யாணம் செருவாமணியில்செய்துகொண்டு,டீக்கடை வைத்துக்கொண்டும்,வைத்தியம் செய்துகொண்டும் இருக்கிறேன்.மாதந்தோறும் வடக்குப்பொய்கைநல்லூர் கோரக்கசித்தர் ஆசிரமத்துக்கு சென்று வருவேன்.


இதற்கிடையில் சிந்தாமணி சாமி திருக்கரவாசல் அருகே உள்ள கோமலில் அடக்கமாகிவிட்டார்கள்.பிறகு நானும்,இலுப்பூர் துபாய் (அந்தோணி)என்பவரும் கோமல் சென்று சாமியின் சமாதியை தரிசனம் செய்துவந்தோம்.சிலமாதங்களுக்குமுன் நானும் என் பிள்ளை தெய்வானை,நித்யா,குகன்,பாக்கியலெட்சுமி  ஆகியோரும் சிந்தாமணிசாமி தங்கியிருந்த ஊராகிய சிந்தாமணியில் உள்ள ஆண்டாள்புரம் சென்று அவர் தங்கியிருந்த இடத்தை தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.அப்பொழுது ஒரு மளிகைக்கடையில் சிந்தாமணி சாமி தங்கியிருந்த இடம் எது என்று கேட்டேன்,அதற்கு அவர் இங்கிருந்து மேற்கே கொஞ்ச தூரத்தில் இருக்கிறது என்றார்.பிறகு நான் சிறுவனாக இருக்கும்பொழுது சாமியுடன் நாகப்பட்டினம் சென்று மருந்து வாங்கிக்கொடுத்து எடுத்துவா என்று சொன்னார்,நானும் மருந்து முட்டை தூக்கிக்கொண்டு அவருடன் வந்தேன்,சாமி நடக்கமுடியவில்லை என்றேன்,அவர் புத்தூர் அண்ணாசிலையில் என்னிடம் பதினைந்து காசு கொடுத்து நீ போய் திருப்பூண்டி மூலைக்கடையில் இறங்கு நான் வருகிறேன் என்கிறார்.நான் மூலக்கடையில்போய் பஸ்சில்   இறங்கினேன்,எனக்குமுன் சாமி சென்று கொண்டிருந்தார்கள் என்றார் கடைக்காரர்,சாமிகள் பல சித்துக்கள் செய்வார்கள் என்றார். 

 

சுபம்.


சண்முகசுந்தரம்
         

------ o-------.           



 

ஜி .மாசிலாமணி 
அசிஸ்டன்ட் (ஓய்வு)
அரசு உயர்நிலை பள்ளி
புதூர்


ஆண்டாள்புரத்து  சுவாமிகள்

மெலிந்த உடல்,வலது கையில் ஒரு ஊன்றுகோல்,தீட்சண்யமான பார்வை பார்க்கும் அஞ்சாத அறிவுஞானம்,தாய்மொழியாம் தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக பேசும் புலமை,இவர்தான் ஆண்டாள்புரத்து சுவாமிகள்.சுவாமிகளுக்கும் எனது தந்தையார் திரு.வே.கணேசன் (ஏர்வைக்காடு)அவர்களுக்கும் இருந்த உறவு குரு,சீடர் உறவுபோன்றது.அதன் காரணமாக சுவாமிகளை எனது சிறியபிராயம் முதல் நன்கு தெரியும்.தன்னுடன் ஒத்த கருத்துக்கள் உடையவர்களிடம் மட்டுமே (like  minded  people )  நின்று பேசுவார்கள்.இல்லையேல் அவர்கள் நடை நிற்காது.அவர்கள் யாரிடமும் காணிக்கையாக தன் கரம் நீட்டி பெற்றதில்லை. காணிக்கையாக ஏதும் தர முன்வந்தால் அதனை அவர் எதிரில் தரையில் வைத்து விடுவார்கள்,அதனை தன் கையால் எடுத்து மடியில் வைத்துக்கொள்வார்கள்.இதுதான் அவர்களது மிகப்பெரிய பலம்.அந்த காணிக்கைகளை பாதுகாப்பதில் தந்தை பெரியார் அவர்களைப்போல பாதுகாக்கும் வலிமையையும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டென்றால் அது மிகையாகாது.தந்தை பெரியார் அவர்களைப்போல் தனது சுய செலவிற்காக அதனை பயன்படுவதில்லை.இல்லற வாழ்க்கையில் அவர்பெரியார் ,துறவற வாழ்க்கையில் அவர் பெரியார்.   
 

சுவாமிகளுக்கு கோமலில் மணிமண்டபம் கட்டப்பட்டு அவர்களது சமாதியும் அமைந்துள்ளது.இது அவர்களது புகழினை ஞாலம் உள்ளவரை பறைசாற்றும்.அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "ராமா"என்பதுதான்.மற்றவர்களுக்கு என்ன போதனை   செய்தாலும் ராம அவதார பெருமையினை சொல்லாமல் இருந்ததில்லை.மனித நேயம்,மானுட மாண்பினை காத்து எல்லோரையும் புகழப்படுபவர்களுக்கே "சுவாமிகள்"என்ற பெயர் நிலைக்கும்.இவர்களுக்கு சுவாமிகள் என்ற பெயர் சாலசிறப்பு.மேலும் அந்த பெயருக்கு அடைமொழியாக "ஆண்டாள்புரம்"என்ற பெயர் இவர்களது பெயருக்கு முன்னாள் அமைந்திருப்பது மேலும் சிறப்பிற்கு சிறப்பு.எத்தனை மைல் தொலைதூரமாகஇருந்தாலும் நடந்தே செல்வார்கள்.இவர்களது வாழ்நாளில் இவர்கள் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை நீளும்.அந்த நடைப்பயணத்தில் இவர்களது பாதம் பதிந்த இடங்களில் எங்கள் ஊர் ஏர்வைக்காடும் ஒன்று.அந்த ஊரில் அமைந்துள்ள கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் இவர்களுக்கு அடைக்கலம் தரும்.அங்கமர்ந்து இவர்களது பக்தர்கள்,சீடர்களுக்கு நீதிபோதனை தருவார்கள்.நிரம்ப கூட்டம் வரும்.அனைவருமே இவர்களை குருவாக ஏற்றுக்கொள்வார்கள்.ஏர்வைக்காட்டிலிருந்து புதூர் மற்றும் திருநெல்லிக்காவல் ஆகிய ஊர்களுக்கு செல்வார்கள்,வழிநெடுக இவர்களை வழிபடுபவர்கள் ஏராளம்.       

 

சுவாமிகள் ஒரு தனி மனிதன் அல்ல,ஒரு சகாப்தம்,ஒரு காலகட்டம்.ஞானிகள் உதயத்தில் ஓர் அற்புதம் இவர் ,இன்று நம்மிடம் இல்லை.அவரது பேச்சின் ஒலிஅலைகள்  காற்றுள்ளவரை  காற்றில் மிதந்துகொண்டிருக்கும்.வாழ்க அவர் புகழ் ,ஓங்குக அவர்களது நற்போதனை.

மாசிலாமணி 

 

-------- o --------

 

ச.பெரியநாயகம் 
திருநெய்ப்பேர் 


ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகள்   திருவடி போற்றி இந்த கட்டுரையை எழுதுகிறேன்.அவர்கள் சிறந்த சித்தர்.பெரிய மகான்.அடியேனுடைய வீட்டில் இரண்டு மூன்று முறை இரவில் தங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.அவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்,நாங்களாக உணவு தயார்செய்து இலைபோட்டு பரிமாறுவோம்.மிக குறைவாக சாப்பிடுவார்கள்,மீதம் உணவை நான் சாப்பிட்டது உண்டு.சுவாமிகள் பின்னால் யாராவது ஒருவர் பையைத்தூக்கிக்கொண்டு வருவார்கள்.அவர்களிடம் கேட்பேன் நீங்கள் யார்,ஏன் சுவாமிகளுடன் வருகிறீர்கள் என்று.அவர்கள் நங்கள் செய்த பாக்கியம் சுவாமியோடு வருகிறோம் என்பார்கள்.ரயில்வே உத்தியோகஸ்தர்கள்,ஆசிரியர்கள் மற்றும் சட்டத்துறையிலுள்ளவர்களாக இருப்பார்கள்.இரவு முழுவதும் தூங்கமாட்டார்கள்,சூடம்,பத்தி ,மெழுகுவர்த்தி எரிந்துகொண்டு இருக்கும்.ராமஜெபம் செய்வார்கள்.   
 
என்னிடம் நன்றாக பேசுவார்கள்,குடும்பவிசயம் கேட்பார்கள்.நான் திருவாரூர் நகராட்சியில் காசாளராக பணிபுரிகிறேனென்று சொன்னேன்,அப்படியா என்று கேட்டார்கள்.எனது குடும்ப சூழ்நிலைகளைச்சொல்லி கவலைப்படுவேன்.அதற்கு கேட்டுவிட்டு சிரிப்பார்கள்.நான் குடும்பத்துடன் நமஸ்காரம் செய்துகொண்டபோது,நன்றாக இரு என்று சொன்னார்கள்.அவர்களிடம் ஆசிபெற்று சௌகரியமாக குடும்பம் நடத்தி வருகிறேன்.அவர்கள் அடியேன் வீட்டில் தங்கி இருந்த இடத்தில் ஒரு மாடம் அமைத்து அதில் வீட்டின் கொல்லையில் கிடைக்கும் மலர்களை, தினமும் ஒருநாள் விடாமல், அந்த மாடத்தில் இட்டு இன்றும் வணங்கி வருகிறேன்,

ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகளின் திருவடி போற்றி.

ச.பெரியநாயகம்     

-------- o --------

 

எப் .அருளானந்தசாமி
இலுப்பூர் 


சிந்தாமணி சாமியார் அவர்கள் சில புதுமை நிறைந்தவர்.நான் ஒருமுறை மன்னார்குடி சென்றிருந்தபோது அவரை பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.பார்த்துவிட்டு ஊருக்கு புறப்பட்டு வந்தேன்.இருபத்தைந்து கிலோமீட்டர் துரமுள்ள ஊரிலிருந்து முப்பது நிமிடத்தில் திருநெல்லிக்காவல் ஐயப்பன் கோவிலில் பார்த்தேன்.பார்த்தவுடன் அதிர்ந்துபோனேன்.அவர் எப்படி இங்கே வந்தாரென்று அதிர்ந்து போனேன்.அவர் மிகவும் சக்தி வாய்ந்த செயல்கள் செய்வதில் வல்லவர்.இது நான் கண்ணால் பார்த்த உண்மை. 

அருளானந்தசாமி 

-------- o --------

 

 

துரைசிங்கம்
திருநள்ளார்

ஒரு மனிதனின் பிறப்பு,இறப்பு,இடையில் அவனுக்கு நடக்கக்கூடிய இன்பங்கள்,துன்பங்களின் வரலாறு மனிதனாகிய நமக்கு எதுவும் தெரிவதில்லை,ஆனால் முக்காலத்தையும் கடந்தவர்களுக்கு இந்த உலகத்தில் நடக்க கூடிய நிகழ்ச்சிகள் சித்தர்களுக்கும் ,அவதாரபுருஷர்களுக்கும் தெரிந்துவிடும்.அதனை சில சித்தர்கள் தெரிவித்துவிடுவார்கள்.அதனை கேட்டவர்கள் நன்மை அடைவார்கள்.ஆனால் சித்தர்கள் அந்த இன்பத்தை அனுபவிக்கமாட்டார்கள்.எப்போதும்போல இருப்பார்கள்.இதுதான் நான் அவர்களிடம் அறிந்து கொண்ட உண்மை.எனக்கு நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு சில நன்மைகள் செய்தார்கள்.என் குருநாதர் ,ஆண்டாள்புரம் சுவாமிகளுடன் நடந்துபோகச்சொன்னார்கள்.நான் நடந்து அவர்களோடு போனேன்.மன்னார்குடி தெருவீதியில் நடந்துபோகும்போது சாமிகள் எனக்கு கட்டளை இட்டார்கள்.திரும்பி பார்க்கக்கூடாது.இருபக்கமும் பார்க்கக்கூடாது.நேராக எந்த பக்கமும் என் பார்வை திரும்பிப்பார்க்காமல் வரவேண்டும்என்றார்கள் .அவர்கள் சொல்லி இரண்டு நிமிடத்தில் எனக்கு பக்கத்தில் தொப்பென்று கீழே ஒரு ஆள் பிணமாக விழுந்தான்.எனக்கு பயம் தாங்காமல் வேகமாக நடந்து வந்து விட்டேன்.இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது,எனக்கு நடக்கவேண்டியதை மாற்றிவிட்டார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.

இப்படிக்கு
துரைசிங்கம்
   

------- o --------

 

 

ஆர்.அந்தோணி
இலுப்பூர்

நடைசாமியை தெரிந்தது புதூர் மாடம் தான்.எனக்கு வயது 14 .சின்னமில்லில் தங்கியிருந்தேன்.சிந்தாமணி சாமி மன்னார்குடிக்கு செல்லும் வழியில் புதூர் திருவாசப்பட்டத்தில்தங்கி இருப்பார்கள்.வேட்டி கட்டப்பட்டிருக்கும்.புதூர் சாமி சொன்னதால் இரண்டு,மூன்று முறை கடையிலிருந்து இட்லி வாங்கி கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன்.எப்போதும் எங்கு சென்றாலும் நடந்தே செல்வார்கள்.

அந்தோணி     

 

-------- o---------

 

ராமலிங்கம்
த/பெ தர்மராஜ் 
சிந்தாமணி மெயின் ரோடு
சிந்தாமணி
04365  265  269 

எனக்கு சுமார் இருபது வயதிருக்கும்,அப்போது சுங்க இலாகா அதிகாரிகள் நான்கைந்துபேர் வந்தார்கள்.அவர்கள் வந்து இங்கு கடத்தல் வியாபாரம் நடக்கிறதா என விசாரணை செய்தபோது யாரோ சுவாமிகள்தான் கடத்தல் செய்வதாக கூற உடனே காவல்துறை அதிகாரி சுவாமியை அழைத்துவரும்படி கூற அதன்படி சுவாமியை போய் அழைக்க அதற்கு நான் அங்கு வரமுடியாது வேணுமென்றால் அவர்களை இங்குவர சொல்லு   என கூற அதை காவல்துறை அதிகாரியிடம் வந்து கூற அதை கேட்ட காவல்துறை என்ன..வரமுடியுமா முடியாதா என கேட்க,உடனே சுவாமியும் வந்து காவல்துறை அதிகாரியை சந்திக்க ,அப்போது காவல்துறை அதிகாரி சேரில் உட்கார்ந்துகொண்டு சுவாமியை நிற்கவைத்து கேள்விகள் கேட்க,அதற்கு சுவாமிகள் ஆங்கிலத்தில் பதில் கூற சுவாமியின் பதிலைக்கேட்ட காவல்துறையினர் அச்சம்கொண்டு  சுவாமியை சேரில் உட்க்காரும்படி   கூற,சுவாமிகள் கையமர்த்திவிட்டு ராம ராம என்று கூற உடனே காவல்துறையினர் சுவாமியை போகும்படி கூற சுவாமிகள் அவ்விடத்தைவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து விட்டார்கள்.   நான்சிறுவனாகஇருக்கும்போதுஎன்னிடம்சுவாமிகள்,வாடா...போய்கடையில்இட்லி,முறுக்கு,புகையிலை,மெழுகுவர்த்தி வாங்கி வரும்படி காசு கொடுப்பார்கள்.நானும் வாங்கிவந்து சுவாமியிடம் அவர்கள் இருக்கும் இடத்தில் பத்தடி தூரத்தில் வைத்துவிடுவேன்,மீதி காசிருந்தால் அதை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டு ராமராம என கூறும்படி கூறுவார்கள்.நானும் அது போல் கூறி காசை குளத்தில் எரிந்து விட்டு வந்துவிடுவேன்.

எழுபத்திஏழு புயலின்போது சுவாமிகள் தங்கியிருந்த இடத்திலிருந்த புங்கமரத்தை விடியவிடிய பிடித்துக்கொண்டு நின்றநிலையில் இருந்தார்கள்,நாங்கள்,ஊரிலிருந்த நான்கைந்துபேர் சென்று சுவாமியை கட்டிலில் போட்டு தூக்கிவைத்து கொண்டுவந்து கிருஷ்ணமூர்த்தி என்பவற்றின் வீட்டில் குளிப்பாட்டி தங்க வைத்தோம்,ஒரு மணி நேரம்தான் இருக்கும்,சுவாமிகள் நல்ல நிலை பெற்று உடனே தன் இருக்கும் இடத்திற்கு எழுந்து சென்றுவிட்டார்கள்.ஒரு முறை சுவாமியை ,சுவாமிகள் இருக்கும் இடத்திற்கு சுவாமிகளுக்கு நன்கு தெரிந்தவர்கள் காரில் வந்து கூப்பிட்டார்கள் .அதற்கு சுவாமிகள் நான் காரில் வரமாட்டேன்,நீங்கள் முன்னாடி செல்லுங்கள்,நான் வந்து விடுகிறேன் எனக்கூற அவர்களும் காரில் முன்னே செல்ல சுவாமிகள் அவர்களுக்கு முன் சென்று காரில் வந்தவர்களின் இருப்பிடத்திற்கு சென்று விட்டர்கள்.காரில் வந்தவர்கள் எப்படி சாமி வந்தீர்கள் நாங்கள் கரைக்கூட எங்கும் நிறுத்தாமல் வந்து கொண்டு இருக்கிறோம் ,எனக்கூற அதற்கு சாமிகள் ராமராம என ராமநாமத்தை மட்டும் கூறியதாக கூற கேள்வி ட்டிருக்கிறேன்.

ராமலிங்கம்

 

--------- o ----------

 

 

கிருஷ்ணமூர்த்தி
த/பெ இருளப்பன்
சிந்தாமணி

நான் சிறுவனாக இருக்கும்போது சுவாமிகள் என்னிடம் இட்லி டீ என தின்பண்டங்கள் வாங்கி வர சொல்வார்கள்,நானும் வாங்கி கொடுப்பேன்.ஒருமுறை புயல்காற்று மாதிரி மழை பெய்து கொண்டிருந்தபோது சுவாமிகள் எங்கள்வீட்டில் வரான்டாவில்கிடந்த பெஞ்சில் சுவாமியுடன் இருந்த குணசேகரன் கொண்டுவந்துவிட சுவாமிகள் எங்கள் வீட்டு பெஞ்சில் படுத்து இருந்தார்கள்,நாங்கள் சுவாமிக்கு காப்பி வைத்து கொடுத்தோம்,அதைவாங்கி சாப்பிட்டார்கள்,பிறகு தோசை சுட்டு கொடுத்தோம் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு படுத்து இருந்தார்கள்,அப்போது இரவு என்கனவில் வீடு முழுவதும் பொன்னும் பொருளும் நிறைந்து இருப்பது போல் கனவு கண்டேன்,பிறகு விடிந்ததும் சுவாமிகள் அவர்கள் இருப்பிடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஒருமுறை நானும் குணசேகரன் அப்பாவும் எனக்கு ஒரு கன்னுகுட்டி மாடு வாங்குவதற்காக பலமுறை பல இடங்களை சுற்றி பார்த்தும் நாங்கள் விரும்பும்படியான மாடு கிடைக்கவில்லை,பிறகு சுவாமியை சென்று பார்த்து என் குறையை கூறினேன்,அதற்கு நான் இருக்கும் இடத்திற்கு நேரே மேற்கு திசையில் கையைக்காட்டி அங்குபோய்பார் கிடைக்கும் என கூறினார்கள் ,அதேபோல் நானும் சென்றுபார்த்தேன்.சுவாமிகள் கூறியதுபோல் நான் விரும்பியபடி ஒரு கன்னுகுட்டி மாடு ஒன்று கிடைத்தது அதை வாங்கி வந்தேன்.

அதேபோல் சுவாமியை வெளியூர்களிலிருந்து பலபேர் வந்து பார்த்து செல்வார்கள்.பலரும் சுவாமியிடம் தம் குறைகளை கூறி குணம் பெற்று செல்வார்கள்.அதேபோல் சுவாமி எங்கு சென்றாலும் நடந்தே செல்வார்கள். எந்தஒரு  வண்டியிலும்ஏறமாட்டார்கள் .ஆனால் எப்படித்தான் வருவார்கள் என்று தெரியாது ,இங்கு பார்ப்பதுபோல் தெரியும் கொஞ்சம் நேரத்திற்கெல்லாம் எதாவது ஒரு ஊரில் பார்த்ததாகவும் ,இருப்பதாகவும் சொல்வார்கள்.

கிருஷ்ணமூர்த்தி
 
  ----------- o ------------

 

 

ர்.சேகர்
சிந்தாமணி

ஆண்டாள்புரம் சுவாமிக்கு,புதூர் சுவாமிகள்,சுவாமிக்கு தேவையான பூஜை அபிஷேக சாமான்களை கொண்டுவந்து எங்களிடம் கொடுத்து ஆண்டாள்புரம் சுவாமியிடம் கொடுக்கும்படிகூறிகொடுத்து செல்வார்கள்.நாங்களும் சுவாமிகள் வந்ததும் அபிஷேக பூஜை சாமான்களை கொடுத்துவிடுவோம்.

 சாரதாம்பாள்

என் கணவர் ராமதாஸ் அவர்கள் ஆண்டாள்புரம் சுவாமியிடம் சுவாமிகள் கேட்கும் பணிவிடைகளை செய்து கொடுப்பார்கள்.எங்கள் வீட்டுக்கு வருவார்கள்,வந்தால் நாங்கள் வரக்காப்பி போட்டு கொடுப்போம்,அதை சாப்பிட்டுவிட்டு செல்வார்கள்.சாமிகள் யாரிடமும் எவ்வித பாரபட்சமும் இன்றி தன்னை நாடிவருகிறவர்களுக்குஆறுதலும் அறிவுரையும் கூறி அனுப்புவார்கள்.  

சேகர்

 நான் சிறு வயதாக இருக்கும்போது சுவாமிகள் என்னைகூப்பிட்டுகடையில்டீமுறுக்கு,புகையிலை,அல்லதுகாலை(டிபன்)இட்லி,ஆகியன எது தேவையோ அவற்றை வாங்கிவர சொல்வார்கள்.நாங்களும் தேவையான பொருட்களை கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்து சுவாமிகள் அவர்கள் இருக்கும் இடத்தில், ஒரு பத்தடி தூரத்தில் வைக்க சொல்வார்கள்.அப்படியே நாங்களும் சுவாமிகள் சொன்னபடி பத்தடி தூரத்தில் பொருட்களை வைத்துவிட்டு வந்து விடுவோம்.நாங்கள் அவ்விடத்தைவிட்டு வந்ததும் சுவாமிகள் அப்பொருட்களை எடுத்து செல்வார்கள்.சுவாமிகள் யாரிடமும் நெருங்கிபழக்கமாட்டார்கள்.யாராகஇருந்தாலும்பத்தடிதூரம்தள்ளியேநிற்பார்கள்.ஆனால் யாரிடமும் குளம்,கோத்திரம்,சாதி,மாதம் பார்த்து பழகாமல் அனைவரையும் சரிசமமாக பாவித்து பழகுவார்கள்.சுவாமியிடம் மக்கள் தங்கள்குறைகளைகூறினால்அவர்களுக்குதக்கஆலோசனையும்அறிவுரையும்கூறிஅனுப்புவார்கள்.நோய்வாய்பட்டோஅல்லதுதங்களின் ஆடுமாடுகள் காணாமல் போனது பற்றியோ கேட்டால் அனைத்தும் நலமாகும் போடா என்று கூறி அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மண்ணைஅள்ளி   கொடுத்தாலும் அனைவரும் நலமுடன் இன்னல்கள் நீங்கப்பெற்று வீட்டு திரும்புவார்கள்.

ஆண்டாள்புரம் சுவாமிகளை பார்க்க பலபேர் வருவார்கள்,அப்படிவரும்போதுசுவாமிகள்சிலசமயங்களில்இருக்கமாட்டார்கள்,அப்போது சுவாமியை பார்க்க வந்தவர்கள் எங்கள் வீட்டில் சுவாமிகள் திரும்பிவரும்வரை தங்கியிருந்து பார்த்துவிட்டு செல்வார்கள் அல்லது அவர்கள் கொண்டுவந்த பொருட்களை எங்களிடம் கொடுத்து சுவாமிகள் வந்ததும் கொடுக்க சொல்லி சொல்வார்கள்,நாங்களும் சுவாமிகள் வரும்வரை அவர்கள் கொடுத்த பொருட்களை பத்திரமாக வைத்திருந்து கொடுப்போம்,சுவாமிகளும் வெளியிலிருந்து வந்ததும் நேராக எங்களிடம் சுவாமிகள் கூடஇருந்த குணசேகரன் என்பவரைவிட்டு யாரும் என்னைத்தேடி வந்தார்களா அல்லது எதாவது சாமான்கள்கொண்டுவந்துகொடுத்தார்களாஎனகேட்டுவாங்கிசெல்வார்கள்.சாமியிடம்கொடுக்கசொல்லிக்கொடுத்தஎந்தபொருளாக

இருந்தாலும் அதாவது பூவாக இருந்தாலும்,நாள் பத்து ஆனாலும்கொடுத்தபொருட்கள்அப்படியேஇருக்கும்.ஒருமுறைநாங்கள்சுவாமியை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்தோம்,ஆனால் சுவாமிகளை தவிர்த்து மற்ற மரம்,செடி கொடிகள் மட்டும் புகைப்படத்தில் பதிவாகி இருந்தது.

சேகர் குடும்பத்தினர்
   
 

 

  ----------- o ------------

i

த,பக்கிரிசாமி
த/பெ தர்மலிங்கம்
சிந்தாமணி

சாமியின் மைத்துனர் (சாமியின் அக்கா புருஷன் ) மகா மந்திரவாதி  அவர்கள் தான்செய்யும் மாந்த்ரீகவேலைகள் பலன் தராததால் சுவாமியை கட்டிக்கொண்டு தூக்கிப்போய் தன்னிடத்தில் வைத்துக்கொண்டு தன் மாந்த்ரீக வேலைகளுக்கு சுவாமியை பயன்படுத்தி கொள்ள நினைத்து மன்னார்குடியில் இருந்து மூன்று காரில் அடியாட்களுடன் சிந்தாமணி மெயின்  ரோட்டில் வந்தபோது மூன்று காரும் தானாகவேநின்றுவிட்டது,காரில்இருந்தவர்களும்காரைவிட்டுகீழேஇறங்கமுடியாமல்இரவுமுழுவதும்பரிதவித்துக்கொண்டிருந்தார்கள்,விடிந்தபிறகு கிராம மக்கள் சாமியிடம் சென்று நடந்த சங்கதிகளை கூற,தெரியும்...தெரியும்...வண்டி எடுக்கும் என கூற வந்த மூன்று காரும் வந்த இடம் தெரியாமல் பறந்து சென்றது.அதுபோல் சுவாமியை பத்தி தரக்குறைவாக புறத்தே பேசிவிட்டு சுவாமியிடம் சென்று பார்க்கும்போது சுவாமி அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். 

 

தி.தர்மலிங்கம் 

 

------------ o ---------------

 

 

கிருஷ்ணமூர்த்தி
த/பெ மாரிமுத்து
காரபிடாகை

நான் சுமார் பதினாறு  வயது  இருக்கும்போது ஆண்டாள்புரம் சாமியிருக்கும் இடத்தில் புங்கமரத்தடியில் அமர்ந்து இருந்தபோது நான் சாமியிடம் சென்று என் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சென்று பார்த்தேன்,அப்போது சாமி தானிருந்த இடத்தில் உள்ள மண்ணை அள்ளிமடித்துக்கொடுத்து போடா எல்லாம் சரியாப்போயிடும் என்று கூறினார்கள்,அதுபோல் எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது.

நான் சாமியை அடிக்கடி சென்றுபார்த்து வருவேன்,அப்போது சாமிக்கு என்னால் முடிந்ததை  சாப்பாடு,ரொட்டி,பன்,முறுக்கு,இப்படி தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பேன்.அதை சாமி எவ்வித பாரபட்சம் பார்க்காமல் சாப்பிடுவார்கள். அதேபோல் எப்போதாவது எங்கள் ஊர்ப்பக்கம் சாமி அவர்கள்  வந்தால்,எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் வந்து தங்குவார்கள்.அப்படி வரும்போது நான் எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு,மோர்,காபி,,எது இருக்கிறதோ அதை சாமி அவர்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்வார்கள்.

பில்லி, சூனியம், சீக்கு, பிணி, நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுகிறவர்கள் சாமியை வந்து பார்த்தால்சாமி அவர்களிடம் அவர்கள் இருந்த இடத்திலுள்ள மண்ணை அள்ளிக்கொடுத்து போடா..எல்லாம் சரியாயிடும் என கூறுவார்கள்,அதுபோல் எல்லா தீயவினைகளும் இருக்குமிடம் தெரியாமல் பறந்துபோகும்.

கிருஷ்ணமூர்த்தி

  ------------ o -------------- 
 

லெட்சுமணன்
த/பெ சுப்ரமணியன்
வாழக்கரை

நான்ஆண்டாள்புரம்சுவாமிகளிடத்தில்அளவற்றஅன்புகொண்டவன்.ஒருமுறைசாமிகள்என்னைப்பார்த்துமன்னார்குடிக்குவாடாஎன்றார்கள்.அதற்குநான்சாமிஎனக்குதற்சமயம்குடும்பசூழ்நிலைசரியில்லைஆகவேதற்சமயம்வரயியலாதுஎன்றேன்.அதற்குசுவாமிகள்நல்ல

நிலைக்கு வந்தால்வருகிறாயாஎன்றார்கள்,வருகிறேன்என்றுகூறிவீட்டிற்குசென்றுவிட்டேன்.சுவாமிகளின்வாக்குபடிமிகவிரைவில் நல்ல நிலைமைக்குவந்துவிட்டேன்.சாமிகளுடன்மன்னார்குடி,புதூர்போன்றஊர்களுக்குசென்றுவந்திருக்கிறேன்.சுவாமிகளின்பேரருள் கருணையால் நன்றாகஇருக்கிறேன்.என்அண்ணன்தருமன்என்பவரசுவாமிகள்பால்அன்புகொண்டிருந்தார்.சுவாமிகளுடன்புதூர்,

மன்னார்குடி,ஆண்டாள்புரம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று வருவார்.அவரது குடும்பமும் நன்றாக இருக்கிறது.   

எங்கள் வீட்டில் ஆண்டாள்புரம் சாமிகள் என்னை மன்னார்குடிக்கு வா என்று அழைத்தார் ,ஆனால் எனக்கு ரொம்ப ஜுரம் உள்ளது,வர முடியாது,என்று கூறினேன்.என்னுடன் வா  உனக்கு எந்த சிரமமும்இனி வராது என்று கூறி அழைத்தார்.அவருடன் நான் மன்னார்குடிக்கு சென்று சாமி அப்பா,அம்மா சமாதிக்கு சென்றோம்.மூன்றாவது நாள் சென்றபோது தேங்காய் எடுத்துச்சென்று கோவிலில் உடைத்து அதை பத்திரமாக வைத்து கொள்ளுடா என்று கூறியும்,அவர்கள் அப்பா,அம்மா சமாதியிலுள்ள மண்ணை எடுத்துக் கொடுத்தும் எங்கும் உட்காராமல் வீட்டுக்குச்செல்,நல்ல நிலையில் இருப்பாய்,இல்லையேல் வீணாபோய்விடுவாய் என்றுகூறினார்.சாமிசொன்னதைப்போல எனது மச்சான் வீட்டில் தங்கிவிட்டேன்.

லெட்சுமணன்   
 

  -------- o ---------

ராசையன் (என்கிற)வேலாயுதம்

வருடம் 65 /70 ,இந்த காலகட்டத்தில் கருணாநிதியின் குடும்ப சொத்து பிரச்சினையில் கருணாநிதி தூக்குமாட்டி இறந்துவிட்டார்,இதற்கும் சுவாமிக்கும் சம்பந்தம் இருப்பதாக காவல்த்துறைக்கு புகார் மனுசென்றது.கருணாநிதி மனைவி சொர்ணம்,கருணாநிதியின் அண்ணன் கரும்பாயிரம் ஆகியோர் கொடுத்தனர்.பின்னர் ஏதும் தொடர்பில்லை என தெரியவந்தது.

நான் சுவாமிக்கு தினசரி காலை,மாலை மோர் கொண்டுவந்து கொடுப்பேன்,அதுபோல் எப்பவாவது சாமிக்கு அரிசி,பருப்பு,மிளகாய்த்தூள்,காய்கறிகள் கொண்டுவந்து கொடுத்து சமைத்து சாப்பிட சொல்லி வற்புறுத்துவேன்,அப்போது சேரும் சகதியுமான தண்ணீரை ஒரு சட்டியில் மொண்டுவந்து நான் கொண்டுவந்து கொடுத்த அரிசி காய்கறிகளை எல்லாம் ஒன்றாக கொட்டி வேகவைத்து சாப்பிடுவார்கள்.அப்போது சுவாமி அவர்கள் சாப்பிடும் காட்சியானது நமக்கு வியப்பளிக்கும்விதமாக இருக்கும்,அதாவது சமைத்த சாதத்தில் இரண்டு உருண்டை அளவுதான் சுவாமியின் வாயில் செல்லும்,மற்ற  சாதமெல்லாம் எப்படி எங்கு தான் என்று தெரியாது,சில நொடிகளில் அணைத்து சாதமும் ஒரு பருக்கைகூட இல்லாமல் காலியாகிவிடும்.

 ராசையன் 

 

------------- o --------------

 

 

சுதாகரன்,சகுந்தலா அம்மாள்
திருக்குவளை

அய்யா வணக்கம்,திருக்குவளை/காருகுடி சித்தவைத்தியர் சதாசிவ தேவர் மருமகன் திரு சதா கணபதிதேவர் மனைவி சகுந்தலா ஆகிய நான், மண்ணைவிட்டு மறைந்தாலும், எங்களின் இல்லத்திலும், எங்களின் எல்லோருடைய உள்ளத்திலும், நீங்காத இடம் பெற்று,நீக்கமற நிறைந்திருக்கின்ற ஆண்டாள்புரம் ஸ்ரீலஸ்ரீ ராஜகோபாலசாமி அவர்களைப்பற்றி எனக்கு தெரிந்த ,நானறிந்த நிகழ்வுகளை பற்றி சொல்லுகின்ற வாய்ப்பு  என்கிறபோது உள்ளம் மகிழ்கிறேன்.கடந்த 1965 ஆண்டு நாங்கள் மன்னார்குடியில் டீ கடை வைத்திருந்த போது,அய்யா அவர்களுடைய பழக்கம் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டது,காரணம் அய்யா அவர்கள் மன்னார்குடியில் பிறந்து தன்னுடைய தாய் தந்தை தம்பியுடன் வாழ்ந்தவர்,நாங்கள் மன்னை நகரைவிட்டு திருக்குவளைக்கு குடிபெயர்ந்து சாப்பாடுகடை நடத்திவந்தோம்,அதே வேளையில் அய்யா அவர்களின் அறிய சக்தியின் காரணமாய்,குடும்பத்தைவிட்டு பிரிந்து காரபிடாகை அருகிலுள்ள சிந்தாமணி ஆண்டாள்புரம் என்ற கிராமத்தில் ஒரு சிறிய ஓலைக்குடிசை வேய்ந்து அதில் தன்னந்தனியே வாழ்ந்து வந்தார்கள்.அய்யா அவர்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஊராக கால் நடையாக செல்வதுதான் பழக்கம்.அய்யா அவர்கள் காரிலோ,பஸ்ஸிலோ ஒருநாளும் சென்றதில்லை.இருப்பதுவரை கால்நடை பயணம்தான்.அய்யா அவர்கள் திருக்குவளைக்கு வருவதென்றால் இரண்டுநாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதி விடுவார்கள்.அதன்படி வந்தால் எங்கள் ஊர் அங்காளம்மன் கோயிலில் வந்து அமர்ந்துவிடுவார்கள்.அய்யா வந்துள்ளார்கள் என்று ஆள்வசம் எங்கள் கடையிலிருந்து சாப்பாடு டிபன் கொண்டுபோய் கொடுப்போம்,ஒருநாள் கூட அய்யா அவர்கள் இலவசமாக சாப்பிட்டது கிடையாது.அய்யா அவர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.   
 

அய்யா அவர்கள் என்ன சொல்கிறார்களோ அது தெய்வ வாக்காகவே நடந்துள்ளது.இதை நாங்கள் கண்கூடாக உணர்ந்து இருக்கிறோம்.அய்யா அவர்களின் மகிமைகளை எத்தனையோ சொல்லலாம்.இதில் எங்களுக்கு மூன்று பெண்பிள்ளைகள் ,எங்களுடைய பெரிய மகள் தமிழ்செல்விக்கு இருபத்தியிரண்டு வயதுவரை ஆகிறது,இன்னும் வரன் ஏதும் அமையவில்லை என அய்யா அவர்களிடம் சொன்னோம் ,அய்யா அவர்கள் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டு,எல்லாம் நல்லது நடக்கும் என்றார்கள்.மறுநாள் மதியம் அய்யா அவர்கள் சொன்னதுபோலவே வரன் அமைந்தது மட்டுமல்ல ,அய்யா அவர்கள் எந்தஇடத்திலெல்லாம் தங்கி இருந்தார்களோ,அந்த இடமெல்லாம் மாளிகையாக உள்ளது.ஓலைக்குடிசையாக இருந்த எங்கள் இல்லம் ,அய்யா அவர்கள் அமர்ந்த எங்கள் இடம் இன்று அய்யாவின் அருளால் அண்ணாந்துபார்க்கிற மாளிகையாக மாடிகட்டிடமாக அமைந்துள்ளது.இறுதியாக அய்யா மறைகிற கடைசிநாள் திருக்குவளை அங்காளம்மன்கோயிலில் அமர்ந்து எங்களுக்கு அழைப்புவிடுத்து இரவு உணவு அய்யா அவர்களுக்கு தந்தோம்,மறுநாள் காலை அய்யாவின் உயிர் பிரிந்து,அய்யா அவர்களின் மடியில் ராமர் பதம்,தன்னுடைய பிரம்பு மட்டும் உள்ளது.நாங்கள் எல்லோரும் அய்யாவின் உடலை அய்யா அவர்கள் முன்பு கோமல் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டுமென சொல்லியவாறு அய்யாவை கோமல் கிராமத்தில் கொண்டுபோய் அடக்கம் செய்தோம்.அய்யா அவர்களின் பூத உடல் மறைந்தாலும் ,அய்யா அவர்கள் எங்களுடைய அனைவரின் மனதிலும் ஆழமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.வாழ்க அய்யா புகழ்.

என்றும் அய்யாவின் அடிமை
சுதாகரன்,சகுந்தலா அம்மாள்   
 

--------- o -----------

 

அமிர்தகடேஸ்வரன்
திருப்பூண்டி

சிந்தாமணி ஆண்டாள்புரம் ஸ்வாமிகள்

1975 ல் வயலில் விவசாய மராமத்து வேலை செய்துகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சுவாமியிடம் என் தந்தை ,சுவாமி என் மகன் படித்துவிட்டு சும்மா வீட்டில் இருக்கிறான்,அவனுக்கு ஏதாவது வேலைக்கு அனுப்ப நினைக்கிறேன்,அதற்கு தாங்கள்தான் ஏதாவது வழிசொல்லவேண்டும் என கூறினார்.அதற்கு சுவாமிகள் அடுத்தவருடம் இதேநாளில் வேலைகிடைக்கும் பாருடா..என கூறி சென்றார்கள்,அதில் எனக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் சுவாமி சொன்ன தேதியை என் வீட்டின் சுவற்றில் குறித்துவைத்துக்கொண்டு வேலை கிடைக்குமா,கிடைக்காதா என எதிர்பார்த்திருந்தேன்.ஸ்வாமிகள் கூறியதுபோலவேவேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தபால்துறையில் கிளை அஞ்சலக அதிகாரியாக வேலை செய்வதற்கு உண்டான நேர்முக தேர்வு தபால் வந்தது,நானும் நேர்முக தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து ,தேர்வில் வெற்றி பெற்று திருப்பூண்டி தெற்கு கிளை அஞ்சலகத்தில் கிளை அஞ்சலக அதிகாரியாக ஸ்வாமிகள் சொன்ன அதே தேதியில் பொறுப்பேற்று பணிபுரிந்தேன்.   

நான் கிளை அஞ்சலக அதிகாரியாக பொறுப்பேற்று ஒரு வருடம் கழித்து ஸ்வாமிகள் நான் பணிபுரிந்த கிளை அஞ்சலக அலுவலகத்திற்கு வந்து காசை கொடுத்து தபால் அட்டைகள் (போஸ்ட் கார்டு)கேட்டார்,அந்த நேரத்தில் என்னிடம் தபால் அட்டைகள் இருப்பு இல்லாததால், தபால் அட்டைகள் தற்போது என்னிடம் ஏதுமில்லை சாமி,வந்ததும் தருகிறேன் என கூறியதற்கு ,ஸ்வாமிகள் எனக்கே தபால் அட்டைகள் இல்லை என்கிறாய் கொடுடா காசை என்று வாங்கிக்கொண்டு கோபமாக சென்றார்கள்.அதன்பிறகு ஒருவாரம் கழித்து ஸ்வாமிகள் திருப்பூண்டி மாரியம்மன் கோவில் வாசலில் உட்கார்ந்து இருந்தார்கள்,அப்போது நானும்,என் நண்பர்கள் பக்கிரிசாமி,ஆசாரி  மகன் சுப்ரமணியன்,மாசிலாமணி(கொல்லுப்பட்டரை) ஆகிய மூவரும் சென்று ஸ்வாமியை பார்த்தோம்  ,அப்போது ஸ்வாமிகள் என்னுடன் வந்தவர்களை விசாரித்துவிட்டு,என்னை பார்க்காமல் மாரியம்மனை பார்த்துக்கொண்டு வேலை வாங்கிக்கொடுத்த என்னை பார்க்காமல் யார் யாருக்கோ மணிஆர்டர் அனுப்புகிராய்,இருபத்திநான்கு மணி நேரத்தில் இங்கு உள்ள அலுவலகத்தை அங்கு மாற்றுவேன்,அங்கு இருக்கும் அலுவலகத்தை இங்கு மாற்றுவேன் என கூறினார்கள்.ஜூலை பதினேழந்தேதி உனக்கு முத்திரை வைத்து விட்டாச்சு என கூறினார்கள்.அதேபோல் ஸ்வாமிகள் கூறியபடி 17 /07 /1978 அன்று அஞ்சலக அதிகாரிகள் வந்து எனது கிளை அஞ்சலக கணக்கில் கையாடல் ரூபாய் இருநூற்றைம்பது என கூறி முத்திரை வைத்துவிட்டார்கள்,எனக்கு வேலைபோய்விட்டது.உடனே நான் ஸ்வாமியை தேடிச்சென்றபோது சுவாமி திருப்பூண்டி சத்திரத்தில் உட்கார்ந்திருந்தார்கள். 

 

நான் எனக்கு நடந்த விபரங்களை கூறினேன்,அதற்கு ஸ்வாமிகள் பலமாக சிரித்துவிட்டு,அப்படியா..சரி போடா.போய் . எனக்கு ஒரு சாப்பாடு வாங்கிவந்து கொடுத்துவிட்டு போடா என கூறினார்கள்,அதற்கு நான் ,என்ன சாமி என் வேலை போய்விட்டது என்று சொன்னதற்கு சிரிக்கிறீர்கள்என கேட்டதற்கு,போடா..எல்லாம் எனக்கு தெரியும்,நான் சொன்னதை செய்டா..என்று என்னை சாப்பாடு வாங்கிவந்து கொடுக்கும்படி கூறினார்கள்,நானும் ஸ்வாமிகள் கூறியபடி சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றேன்.அதன்பிறகு பலமுறை ஸ்வாமியை அடிக்கடி பார்ப்பதற்கு செல்வேன்.என் வேலை விஷயமாக அப்போது நான் சென்னைக்கு சென்று வேலை பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.அதற்கு ஸ்வாமிகள்,என்ன சென்னைக்கு போறிங்களா...போங்க..போங்க என கூறினார்கள்.நானும் சென்னைக்கு சென்று ஒரு மாதம் வேலைப்பார்த்தேன்,அதன்பிறகு மீண்டும் ஊருக்கு வந்துவிட்டேன்.

ஒருமுறை கீழ்ப்பிடாகையில் உள்ள ரெங்கசாமி பிள்ளை மனைவி கைவிளக்கு(டார்ச்லைட் ) வீட்டில்வெளியில் முற்றத்தில் வைத்துவிட்டு மறதியாக சென்றுவிட்டார்கள்.அப்போது வெளியிலிருந்து வந்த ரெங்கசாமி மகன் வெளியிலிருந்து டார்ச்லைட்டை வீட்டில் எடுத்து வைத்துவிட்டார்கள்.அதுதெரியாமல் ரெங்கசாமி மனைவி டார்ச்லைட்டை காணும் என தேடிவிட்டு ஆண்டாள்புரம்ஸ்வாமியை போய்ப்பார்த்து டார்ச்லைட் காணாமல்போன விபரத்தை கூறினார்கள்,போடி..எல்லாம் வீட்டில்தான் இருக்கு எனக்கூறி அனுப்பிவைத்தார்கள்.அதற்கு ரெங்கசாமி மனைவி பத்துரூபாயும் ஒருபடி அரிசி கொடுத்துவிட்டு வந்தார்கள்,அதை கேள்விப்பட்ட ரெங்கசாமிப்பிள்ளை மகன், தன் தாயை,எங்கே,எதற்குபோய்  வருகிறாய் என கேட்க அதற்கு ரெங்கசாமியின் மனைவி நடந்த சம்பவங்களைக்கூற ,இதை அனைத்தையும் கேட்ட ரெங்கசாமியின் மகன் உன்னை ,எவன் அந்த பரதேசி பயலை போய் பார்க்க சொன்னது,அவன்கிட்ட பத்துரூபாயும் ,பச்சரிசியும் கொடுக்க சொன்னது,மரியாதையாக கொடுத்த பணத்தையும்,பச்சரிசையையும் ,அந்த பரதேசி பயகிட்டப்போய் வாங்கிகொண்டு வா..இல்ல உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்ட,உடனேரெங்கசாமி மனைவி ஆண்டாள்புரம் சென்று தன் மகன் தன்னை திட்டுவதை கூறி அழ,உடனே ஆண்டாள்புரம் சாமி,ரெங்கசாமி மனைவி கொடுத்த பத்து   ரூபாயையும்,ஒரு படி பச்சரிசியையும் எடுத்து கொடுத்து,போடி..போடி..போய் உன் மகனிடம் கொடு எனக்கூற ஆண்டாள்புரம் சாமியிடமிருந்து பணத்தையும்,அரிசியையும் பெற்றுக்கொண்டு வந்து தன் மகனிடம் கொடுக்க அன்றுமுதல் ரெங்கசாமி பிள்ளை மகனுக்கு உடல்முழுதும் அரிப்பு போல் ஏற்பட்டு எந்நேரமும் அம்மணமாக சொரிந்துகொண்டு இருப்பார். 

 

ஒருமுறை சுவாமி என்னை மன்னார்குடி போகும்படி கூறி இரண்டு ரூபாய் கொடுத்தார்கள்,நானும் பஸ் ஏறி மன்னார்குடி சென்றடைந்தபோது மீதம் இருபத்தைந்து பைசாதான் இருந்தது.டீ கூட குடிக்க முடியாது,ஏண்டா வந்தோம்னு சிந்தித்து கொண்டிருந்தபோது,எனக்கு சிறிது தூரத்தில் சுவாமி சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.கணக்கு பிள்ளை செட்டித்தெரு வீட்டிலிருந்து வந்த உணவை எனக்கு முதலில் தருமாறு கூறியவர்கள்,நான் உண்டபிறகே,உணவருந்தினர்கள்.இப்படி சித்துக்களை  செய்துகாட்டி என்னை சிஷ்யனாக்கி 20 /09 /1989 அன்று கோமல் கிராமத்தில் ஜீவசமாதி அடைந்தார்கள்.

அமிர்தகடேஸ்வரன் 

 

--------- o -----------

 

 

சிவாஜி
த/பெ சின்னப்பிள்ளை
அச்சக்கரை,திருப்பூண்டி

எனக்கு இருபது வயதிற்கும் போது எனக்கு தாளம்மை வார்த்து அப்போது நான் வலி தாங்கமுடியாமல்அவஸ்தைப்பட்டு துடித்துக்கொண்டிருந்தேன்,அப்போது சுவாமியிடம் என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள்.எனக்கு ஏற்பட்ட நிலையை சுவாமியிடம் எடுத்து கூறினார்கள்,உடனே சுவாமிகள் ஏண்டி இப்படி இவனை தொந்தரவு செய்கிறாய் எனக்கூறி அங்குஇருந்த வேப்பமரத்தில் கயிற்றை கட்டி தண்ணீர் ஊற்றினார்கள்,உடனே எனக்குண்டான வலிகள் குறைந்துவிட்டது.

சிவாஜி   

--------- o ----------

 

என்,முருகையன்
த/பெ நடேசன்
மேல வாழக்கரை

ஆண்டாள்புரம் சுவாமிகள் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ராஜகோபால் சுவாமிகள் திருப்பூண்டிக்கு அருகில் உள்ள சிந்தாமணி என்ற கிராமத்தில் புங்கன்மரம்,புற்று அமைந்த ஒருவயலில் சிறிய கூரை கொட்டகையில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருளாகி வழங்கி வந்தார்கள்.  சுவாமிகளின் ஆசிர்வாதம் பெற்று மேன்மை அடைந்தவர்கள் ஏராளம்,எளியேன் ஆகிய நான் ஒருமுறை எனக்குவேண்டிய ஒருவரது நகையை மீட்பதற்க்காக திருப்பூண்டி வங்கிக்கு சென்று நகையை மீட்டு எடுத்துக்கொண்டு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த சமயம் சாமிகளை அவர்களது இடத்திற்கு சென்று வணங்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது,நான் சாமிகள் இடம் தேடிச்சென்ற சமயம் சாமிகள் திருப்பூண்டி விஜயமாரிஅம்மன்  ஆலயத்தில் இருப்பது தெரிந்து அங்குவந்து வணங்கினேன்.உடனே சாமிகள் நடேசன் மகனே,எங்கே வந்தாய் என்றார்கள்.அதற்கு நான் சாமி உங்களை கணவந்தேன் என்றேன்.அதற்கு மகான் அவர்கள் என்னைப்பார்க்க நீ நேராக வரவில்லை.சேகர் என்பவனுக்கு உன்பெயரில் வைத்தநகையை மீட்டுவிட்டு டீ குடிக்கும் போதுதான் என்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என்று நினைத்துதான் வந்தாய் என திருவாய் மலர்த்தார்கள்.நடந்ததை ஆப்டிடியே சுவாமிகள் சொன்னதும் நான் மெய்சிலிர்த்துபோய் உண்மையை ஒத்துக்கொண்டேன்.சுவாமிகளிடம் விடைபெற்று ஊர் திரும்பினேன்.இந்த சம்பவத்திற்குப்பிறகு சுவாமி அவர்களை வாழக்கரை  சொக்கநாதர் ஆலயம்,திருக்குவளை அங்காளபரமேஸ்வரி ஆலயம்,எட்டுக்குடி கருபட்டிமாரியம்மன்  ஆலயம்,எட்டுக்குடி அருள்மிகு முருகன் ஆலயங்களில்சுவாமிகளை சந்தித்து வணங்கியிருக்கின்றேன்.வணங்கும்போது எல்லாம் சௌகரியம் கிடைக்கும் போ என்றே சொல்வார்கள். 

 

சுவாமிகளை யார் வணங்கினாலும்,அவர்கள் செய்யும் தொழிலை நன்றாக செய் என்றே சொல்வார்கள்,எளியேனாகிய நானும் இதுநாள்வரை சாமிகள் வாக்குப்படி எந்தொழிலை செய்துவருகிறேன்.ஒருமுறை சுவாமிகளை சந்திக்க நானும் என் நெருங்கிய நண்பர் சீனிவாச நாயுடு என்பவரும் தலைமை இடம் ஆகிய ஆண்டாள்புரம் சென்றுகொண்டு இருந்தோம்,செல்லும் வழியில் என் நண்பர்,தம்பி இன்று நாம் இருவரும் சுவாமிகளை வணங்கி உங்களுக்கு நாங்கள் தொண்டுசெய்யவேண்டும் என்று கேட்போம்.சுவாமிகள் ஒப்புக்கொண்டால் சுவாமிகளுடன் மன்னார்குடிக்கு நடந்தேசெல்வோம் என்றார்.சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமிகளின் தலைமை இடம் சென்று வணங்கினோம்.நாங்கள் செல்லும்வழியில் என்ன பேசிகொண்டுசென்றோமோ ,அதை அப்படியே சொல்லி நீங்கள் இருவரும் எனக்கு தொண்டு செய்யவேண்டாம்,உங்களது வேலைகளை நன்றாக செய்யுங்கள் என திருவாய்மலர்ந்தார்கள்.எண்களிருவரையும் ஒருமணிநேரம்வரை அவர்களது இடத்தில் தங்கச்செய்து பிறகு ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்கள்.சுவாமிகளை நான் எங்கு சந்தித்தாலும் நமஸ்காரம் செய்வேன்.சௌகரியம் கிடைக்கும் என்று ஆசிர்வாதம் செய்வார்கள்.

 

என் வீட்டிற்கு பக்கத்துக்கு தெருவில் கண்ணுசாமிப்பிள்ளை என்ற ஒரு ஆன்மிக பெரியவர் இருந்தார்.அவர் சுவாமிகளிடம் அன்புகொண்டிருந்தார்.அவரது மூத்தமகன் சுரமணியன் என்பவர் ஆசிரியர்பயிற்சி முடித்து பலஆண்டுகள் பணிகிடைக்காமல் கூலிவேலை செய்துகொண்டிருந்தார்.சாமிகள் ஆசிர்வாதம் செய்து ஒரு மாதத்தில் உன் மகனுக்கு வேலை கிடைக்கும் என்றார்கள்.சுவாமிகளின் வாக்குப்படி ஒருமாதத்தில் வேலை கிடைத்தது.தற்பொழுது ஓய்வுபெற்று நன்றாக இருக்கிறார். மேலவாழக்கரை கிராமத்தில் தங்கவேல்பிள்ளை என்ற ஒரு அன்பார் சுவாமிகளிடத்து அன்பு கொண்டிருந்தார்.அவர் சுவாமிகளுடன் பலமுறை மன்னார்குடிக்கு செல்வதுண்டு.அவருக்கு பெண் வாரிசுகள் இருந்தது.அவர் சாமிகளை ஆண்வாரிசு வேண்டும் என விண்ணப்பிக்க சுவாமிகளின் அருளால் அவருக்கு மீண்டும் இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தது,அவரது குடும்பம் நல்ல நிலையில் உள்ளது.மேலவாழக்கரையில் சந்திரகிரி நாயுடு என்ற அன்பர் போஸ்ட்மேன் வேலை பார்த்துவந்தார்.அவரும் சாமிகளிடம் அன்புகொண்டவர்.சுவாமிகள் வாழக்கரை விஜயம்செய்யும்போது அவரது மனைவி சுவாமிகளை நடமாடும் பெருமாள் என்றே சொல்வார்கள். 

 

வாழக்கரை கிராமத்தில் ராமையன் என்பவர் சாமிகளிடத்து மிகுந்த பக்தி விசுவாசம் கொண்டிருந்தார்.சுவாமிகளுடன் பல இடங்களுக்கும் சென்றுவருவார் .சுவாமிகள் அவரைப்பற்றி கூறும்போது,எனக்கு ரொம்பபிடித்தவன்என்றும்,பொய்யேசொல்லமாட்டான் என்றும் பெருமையாக பேசுவார்கள்.சுவாமிகளை யார் ஒருவர் வணங்கினாலும் கோவிலுக்கு தீபம் போடுங்கள் என்றே சொல்வார்கள்,எனக்கு தெரிந்தவரை சாமிகளிடம் அன்புகொண்டு இருந்த அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.ஆண்டாள்புரம் சுவாமிகளின் அற்புதத்தைப்பற்றி நான் என் மனைவியிடம் சொல்லும்போது,நாம் சுவாமிக்கு ஒருமுறைகூட மதிய உணவு கொடுக்கமுடியவில்லையே என சொல்வதுண்டு,என்ன காரணமோ அது பல ஆண்டுகள் நிறைவேறவில்லை.ஒருமுறை சுவாமிகளை
நான் எட்டுக்குடி முருகன் ஆலயத்தில் வணங்கியபோது அவர்களே என்னிடம் என் மனைவி சொன்னதை சொல்லி கடையில் மதிய உணவு வாங்கிவரும்படி சொல்லி அன்புடன் ஏற்றார்கள்.நானும் என் மனைவியும் நிம்மதி அடைந்தோம்.ஒருமுறை வாழக்கரை சொக்கநாதர் ஆலயத்தில் விளக்குபூஜை நடந்த சமயம் என் மனைவி சாமிகளை நமஸ்கரித்தபோது,உனக்கு ஆன் குழந்தை பிறக்கும் என ஆசிர்வதித்தார்கள்.சாமிகளின் வாக்கு பலித்தது.என் இறுதி மூச்சு உள்ளவரை மகான் ஆண்டாள்புரம் சுவாமிகளை மறக்கவே மாட்டேன். 

 

பற்பல அற்புதங்களை செய்து வந்த நமது சுவாமிகள் கோமல் என்ற அழகிய ஊரில் ஜீவசமாதியில் இருந்து அருளாசி வழங்கி வருகிறார்கள்.ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி நம் சுவாமிகளுக்கு குருபூஜை விழா கோமலில் வெகுவிமரிசையாக நடந்துவருகிறது.சுவாமிகளினனுகிரகத்தால் எனக்கு திருப்பணி செய்யும் பாக்கியம் கிடைத்தது.நானும் பல அன்பர்களும் சேர்ந்து அருள்மிகு சொக்கநாதர் ஆலயம்,ஐயனார் ஆலயம்,போன்றவற்றிற்கு கும்பாபிஷேகம் நடந்தபோது சுவாமிகள் அமருமிடத்தில் சுவாமிகளின் திருஉருவத்தை வரைய தீர்மானித்தோம்,சில காரணங்களால் அது முழுமைபெறாமல் ஒருவருடம் இருந்தது.சுவாமிகளின் கருணையால் எனது இளைய மைத்துனர் அரிகிருஷ்ணன் என்பவரால் முழுமையாக செய்யப்பட்டு ,பூஜைகள் நடந்து வருகிறது.சுவாமிகளின் திருவுருவம் வரையப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இருபதாம்தேதி அன்று டி.எஸ்.பி ஐயா அவர்களால்  வழிபாடும்,அன்னதானமும் வாழக்கரையில் சிறப்பாக நடந்து வருகின்றது.

முருகையன். 

 

---------- o -------------

 

ம்.கே.இரவி
த/பெ ம்.காத்தையன் 
காரைநகர்,கீழத்தெரு
திருப்பூண்டி-611110

நான் சிறுவனாக இருக்கும்போது ஆண்டாள்புரம் சுவாமிகளை பற்றி பலரும் பலவாறாக சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்,அதாவது ஆண்டாள்புரம் சுவாமிகள் பறக்கும் சித்தர் என்றும்,மண்ணை அள்ளிக்கொடுத்தாலும் பொன்னாகும் என்றும்.ஆண்டாள்புரம் சுவாமியை நாடி செல்வோர் அனைவரும் நலம் பெற்று வாழ்கின்றனர்.அதுபோல் நான் படிக்கும் காலத்தில் ஆண்டாள்புரம் சுவாமிகள் எங்களூரிலுள்ள திருப்பூண்டி கடைத்தெருவில் சத்திரத்தில் வந்து உட்கார்ந்து இருப்பார்கள்.கொஞ்சநேரம் கழித்து பார்த்தால் திருத்துறைப்பூண்டி அல்லது மன்னார்குடி என்று ஏதாவது ஒரு ஊரில் இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.ஆண்டாள்புரம் சுவாமியிடம் பலரும் அவர் அருள் வேண்டியும் தங்கள் கஷ்டங்கள் விளக்கவேண்டியும் சுவாமியிடம் வந்து அருள் பெற்று,நலம் பெற்று சென்றுள்ளார்கள்.அதுபோல் இன்றும் ஆண்டாள்புரம் சுவாமிகள் இருந்த இடத்திற்கு சென்று சுவாமியை ஒருமனதாக நினைத்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறுவதை கண்கூடாக இன்றும் காணலாம்.அதுபோல் ஆண்டாள்புரம் சுவாமியிடம் தவறாகவும் அவதூறாகவும், சுவாமிக்கு தெரியாமல் பேசியோரை, அவர்கள் என்னமாதிரி,எப்படி பேசினார்கள் என்பதை, சுவாமியை அவமரியாதை செய்தவர்கள் வருவதற்கு முன் அவரின் குண நலன்களை துல்லியமாகவும்,சரியாகவும் ஆண்டாள்புரம் சுவாமிகள் கூறிவிடுவதாகவும்,சுவாமியை அவதூறாகவும்,கேவலமாகவும் பேசியவர்கள் சுவாமியிடம் வந்து சேரும்போது அவரின் நடத்தைகளை எடுத்துக்கூறி அவர்களை தன்னிடம் வரவேண்டாம் என கூறுவார்கள்.சுவாமியைஅவதூறாக பேசியவர்கள் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கும்போது அவர்களை மன்னித்து,நலம்பெற்று,நல்ல சிந்தனையுடன் வாழ அருள்புரிவார்கள்.

அதுபோல் ஆண்டாள்புரம் சுவாமிஇடம் அக்கம்,பக்கம் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் உள்ள ஆடு,மாடு மற்றும் பொருட்கள் காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ சுவாமியிடம் வந்து முறையிட சுவாமிகள் அவர்களிடம் எப்படி சொல்கிறார்களோ அதன்படி நடந்துகொண்டால் அது அப்படியே நடக்கும்.மேலும் சுவாமியிடம் தங்களின் உடல்நிலை சரியில்லை என்றோ அல்லது மனநிலை சரியில்லை என்றோ சுவாமியிடம் வந்து குறி வேண்டிநிற்க அவர்களுக்கு சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திலுள்ள மண்ணை அள்ளிக்கொடுத்து ,போடா..அல்லது போடி...எல்லாம் சரியாயிடும் என்று கூற அது அப்படியே  நடக்கும்.

இரவி
 
   
  ----------- o -------------

 

ஜெயராமன்
த/பெ கோபால்க்கோனார்
வாழக்கரை


நான் சாமிகள்மீது பேரன்பு கொண்டவன்,என்னை சாமிகள் பலமுறை மன்னார்குடிக்கு அழைத்து சென்றார்கள்.சுவாமிகளுக்கு வேஷ்டி துண்டுகளை அன்போடு துவைத்து கொடுப்பேன்,எனக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன்.சுவாமிகள் ஒருமுறை  என்னைப்பார்த்து,ஜெயராம்.. உனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கும் என்றார்கள்.சுவாமிகளின் வாக்குப்படி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. ஒரு பெண்ணுக்கு நல்ல இடத்தில திருமணம் நடந்துவிட்டது.சுவாமிகளின் ஆசிர்வாதத்தால் நானும் என் குடும்பத்தார்களும் சௌரியமாக இருக்கிறோம்.

ஜெயராமன் 

 

------------ o --------------

 

வீரையாக்கோனார்
த/பெ மாரியப்பன்
வாழக்கரை

எனக்கு தற்பொழுது தொண்ணூறு வயதாகிறது,சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்த சமயம் சுவாமிகளின் அருள் எனக்கு கிடைத்தது.சுவாமிகள் என் வீட்டின் அருகில் இருந்த ஒரு சிறிய கொட்டகையில் வரும்போது தங்கிஇருப்பார்கள்.சுவாமிகள் என்னிடம் வரும்போதெல்லாம் உணவளித்து மகிழ்வேன்.பலவருடங்கள் சுவாமிகள் என்வீட்டில் தங்கி சென்றுள்ளார்கள்.என் மூத்தமகன் படித்துவிட்டு பலவருடம் வேலையின்றி இருந்தான்.சுவாமிகளின் ஆசிர்வாதத்தால் அரசு வேலை கிடைத்து தற்பொழுது பனி ஓய்வு பெற்று நன்றாக இருக்கிறான்.ஒருமுறை என்னிடத்தில் சுவாமிகள் தங்கிஇருந்தபோது,என் பெண்களையெல்லாம் எப்படி திருமணம் செய்து கொடுக்கப்போகிறேன் என்று சொல்லி கவலைப்பட்டேன்.அதற்கு சுவாமிகள் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என சொன்னார்கள்.சுவாமிகளின் வாக்குப்படி நன்றாக நடந்தது.நான் யாரிடம் பேசினாலும் ஆண்டாள்புரம் சாமிகள் வாக்கு,எட்டுக்குடி முருகன் அருள் என்றே சொல்வேன்.இது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.இந்த வயதிலும் நான் சாமிகளின் அனுக்கிரகத்தால் சௌரியமாக இருக்கிறேன்.என் இறுதி மூச்சு உள்ளவரை ஆண்டாள்புரம் சுவாமிகளை,,எட்டுக்குடி முருகனையும் மறவேன்.இது உறுதி.

வீரய்யா   

------------ o ---------------

 

எஸ். குருசாமி
த/பெ சாமியப்பன்
சிந்தாமணி

ஆண்டாள்புரம் சுவாமிகள் (ராஜகோபால சுவாமிகள்)சிலோன்,இலங்கையிலிருந்து வந்தார்கள்,எனக்கு பதினாறு வயதிருக்கும் அப்போது ஒருமுறை சுவாமியின் இடத்தில இலங்கையிலிருந்து சரக்கு வந்ததாகவும்,அதை தன்ணீரிருக்கும் இடத்தில வைத்திருந்ததாகவும் சுவாமியை சுங்க இலாக்கா அதிகாரிகள் வந்து கேட்டதாகவும் அவர்களிடம் சுவாமிகள் ஆங்கிலத்தில் பேசியதாகவும் அதை கேட்ட அதிகாரிகள் சென்றதாகவும் கூறினார்கள்.சுவாமியின் தம்பி மாரியப்பன்,சுவாமியின் உறவினர்கள் பக்கிரிசாமி,நாராயணசாமி,முத்துசாமி,நடராஜன்(ஸ்/ஓ நாகலிங்கம்),ஆகியோர்தான் காரணம்

என் மகன் திருநெல்வேலியில் வேலை பார்த்துவந்தார்,ஊருக்கு வரும்போது சுவாமியை சென்று பார்த்து வரும்படி கூறினேன்.சுவாமியை பார்க்க சென்ற என் மகனை,வாடா...குருசாமி மகனா நீ...வா ..என்ன செய்யிற..எப்படி இருக்கிற..என விசாரித்து இருக்கிறார்கள்.என் மகனும் ,தான்திருநெல்வேலியில் வேலைபார்ப்பதாகவும் வருடத்திற்கு ஒரு முறையே இங்கு ஊருக்கு வருவதாகவும் கூறியுள்ளான்.அப்போது சுவாமிகள் என் மகனிடம் தாமிரபரணி ஆற்று தண்ணீரும்,ஒரு வேட்டியும் எடுத்து வரும்படி கூறியுள்ளார்கள்.அதன்படி மறுமுறை வரும்போது தாமிரபரணிஆற்று   தண்ணீரும் நாலுமுள்ள வேட்டியும் எடுத்து கொண்டுவந்தான் என் மகன்,அதைப்பார்த்த நான் சாமி நாலரைமுழம்  வேட்டிதான் காட்டுவார்கள்,நாலு முழம் வேட்டி எல்லாம் கட்டமாட்டார்கள் என கூறி அந்த நாலு முழ வேட்டியை வாங்கி நான் என் வீட்டில் வைத்துவிட்டேன்.பிறகு என் மகன் தாமிரபரணி ஆற்று நீரையும் முறுக்கு மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை மட்டும் கொடுத்துவிட்டு வந்தான்.பிறகு நான் ஒரு வருடம் கழித்து சுவாமிக்காக வாங்கி வந்த வேட்டியை நான் கட்டி கொண்டு என் வீட்டிற்கு கிழக்கே ,காமேஸ்வரம் சென்று மாடு வாங்கிவந்து கொண்டிருந்தபோது என் இடுப்பிலக்கட்டியிருந்த வேட்டி தானாக பற்றி எரிந்து விட்டது.உடனே  நான் அதை அவிழ்த்து எறிந்துவிட்டு என் தலையில் கட்டியிருந்த துண்டை கட்டிக்கொண்டு வீட்டிற்க்கு வந்ததும், வீட்டிற்குள் நுழையாமல் நேராக குளித்துவிட்டு சுவாமிகள் இருந்த இடத்தை மூன்றுமுறை சுற்றிவிட்டு சுவாமிகள் இடத்திலுள்ள மண்ணை அள்ளி பூசிகொண்டுவந்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கனவில் மூன்று பேருடன் சுவாமிகள் வந்தார்கள்.அவர்கள் என்னிடம் ஒரு பையை கேட்டார்கள்,என்னிடம் பை இல்லை சுவாமி என கூறி என் தோளில்போட்டு இருந்த துண்டை எடுத்து வீசினேன்.அதை எடுத்து சுவாமிகள்தான் கொண்டு வந்த மூட்டையை கட்டி தூக்கிச்சென்றார்கள்.

பிறகு நான் விழித்துக்கொண்டேன்,இது சம்மந்தமாக பலரிடமும் கேட்டபோது  சரியானபடி விபரம் கிடைக்காமல் போகவே கடைசியாக கோமலில் சமாதிகொண்டிருக்கும் சுவாமியின் இடத்திற்கு ஒரு நாலரை முழம் வேட்டி மற்றும் தின்பண்டங்கள் ,முறுக்கு,மிட்டாய்,புகையிலை,மெழுகுவர்த்தி ஆகியவற்றை வாங்கிக்கொண்டு சென்று சுவாதியின் வைத்துவிட்டு வணங்கி வந்தேன்.

எஸ்.குருசாமி

  ----------- o --------------
   

யாரோ  ???

வாழக்கரை  கிராமத்தில் நடுப்பண்ணை தம்பி என எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேந்திர முதலியார் என்ற ஆன்மிக பெரியவர் சுவாமிகளிடத்து மிகுந்த பக்தி விசுவாசம் உள்ளவர்.அவர் ஆண்டாள்புரத்திற்கு அடிக்கடி சென்று சுவாமிகளை வணங்குவார்.சுவாமிகளின் நிலத்திற்கு கிஸ்தி கட்டுவார் .ஆன்மீக பணிகள் செய்வதில் வல்லவர்.மேட்டூர் கெமிக்கலில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.வாழக்கரை கிராமத்தில் தனக்கு சொந்தமான நஞ்சை,புஞ்சை மனை மற்றும் வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு வேதாரண்யத்தில் தங்கலாம் என நினைத்து  சுவாமிகளை கேட்டபோது,விற்கவேண்டாம் என சுவாமிகள் வாக்கு கொடுத்தபடி அப்படியே வைத்துள்ளார்.இருபது வருடங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது.சுவாமிகளின் அருளால் மீண்டும் குணம் அடைந்துவிட்டார்.எந்த ஒரு காரியம் செய்தாலும் சுவாமிகளை சந்தித்து சுவாமிகள் ஆலோசனைப்படிதான் செய்வார்.   
   

---------------- o -------------------

 

எஸ்.ஆர்.முருகேசன்
மெயின் ரோடு
கொளப்பாடு
9443975526

ஸ்ரீஆண்டாள்புரம் சுவாமிகள்

எஸ்.ஆர் .முருகேசன் ஆகிய நான் ஆண்டாள்புரம் சுவாமிகளிடம் சிறிய வயது முதல் இருந்தேன்.சுமார் நாற்பது வருடங்களாக சுவாமியை எனக்கு தெரியும்.சுவாமி அவர்கள்,கொளப்பாடு  மாரியம்மன் கோயில்,எட்டுக்குடி அங்காளம்மன்,திருக்குவளை அங்காளம்மன் கோவில்,வாழக்கரை சிவன் கோவில்,திருப்பூண்டி காளியம்மன் கோவில்(தை,ஆடி அமாவாசைக்கு சுவாமி அவர்கள் தங்கியிருந்து தரிசனம் கொடுப்பார்கள்)ஆகிய கோவில்களில் சுவாமியுடன் தங்கி இருந்தேன்.புதூர் அண்ணண் சாமியிடம் விட்டு நாங்கள் திரும்பிவருவோம்.ஆண்டாள்புரம் சுவாமி அவர்கள் கொளப்பாடு மாரியம்மன் கோயிலில் தங்கியிருந்த போது"என் குருநாதர் என்னை கூப்பிடுகிறார்"என்று கூறினார். பின் "இரண்டு"நாட்களில் அவர் ஜீவசமாதி ஆனார். சுவாமி அவர்கள் இரண்டு பேருக்கு
சாப்பாடு எடுத்துவர சொன்னார்கள்.பின்பு நான் சாப்பிட்டது லட்சம் பேர் சாப்பிட்டது போல் என்றார்கள். அதை நான் பிறகு உணர்ந்தேன்.   

முருகேசன்
 
  ------------ o --------------

 

சேகரித்த,அனுபவங்கள் பதிப்பிக்கப்பெற்றுவிட்டன,இடை நிறுத்தம் செய்கிறோம்,புதிய அனுபவங்கள்,தகவல்கள் சேகரிக்கப்படும், மீண்டும் தொடருவோம்.

பதிப்பித்தேன் என்பதைவிட, கற்றேன் என்பதுதான் உண்மை,உணருவதற்கு குருவுள்ளம் பெருங்கருணை காட்டவேண்டும்,தயை கூர்ந்து அனுமதியளித்து பதிவேற்றிட அருள்புரிந்த பரமகுருவின்,குருதேவர்களின் பாத  கமலங்களில் சிரம் தாழ்த்துகிறேன்.

 

-------------------------------------------0 o 0----------------------------------------------

 

Holy shrine of paramaguru at pudur athistanam